Wednesday, December 17, 2008

Monday, December 15, 2008

யேர்மனியில் தமிழர் மீதான காடையரின் தாக்குதலைக் கண்டித்து பேரணி


யேர்மனி பிராங்போட்டில் ஈழத்தமிழர்கள் மீது சிங்கள காடையர்கள் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து எதிர்வரும் 20ஆம் நாள் பிராங்போர்ட்டில் கண்டனப் பேரணி இடம்பெறவுள்ளது.

கடந்த 7ஆம் நாள் பிராங்போர்ட்டில் சிறீலங்கா அரசு நடத்திய கண்காட்சியைப் பார்வையிடச் சென்ற தமிழர் ஒருவர் தாக்கப்பட்டதுடன், சிங்களக் காடையர்களின் தாக்குதலில் இருந்து தமிழரைக் காப்பாற்றச்சென்ற மற்றொரு தமிழரும் தாக்கப்பட்டு, இவர்களில் ஒருவர் மீது கத்திக்குத்தும் இடம்பெற்றிருந்தது.

இந்தச் செயலைக் கண்டித்து எதிர்வரும் 20ஆம் நாள் சனிக்கிழமை நண்பகல் 12:30 மணியளவில் நடைபெறவுள்ள பேரணியில் தமிழ் மக்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என, யேர்மனி தமிழ் மக்கள் எழுச்சிக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிப்படுவதுடன், இனிவரும் காலங்களில் இவ்வறான தாக்குதல் இடம்பெறாது பார்த்தல் வேண்டும்.
யேர்மனிவாழ் தமிழீழ மக்களின் பாதுகாப்பை யேர்மனிய அரசு உறுதி செய்ய வேண்டும்.
தாயகத்தில் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் படுகொலை நிறுத்தப்பட வேண்டும்.


போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பேரணி இடம்பெறவுள்ளது.


Friday, December 12, 2008

சிங்கள அரசைக் கண்டித்து தமிழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

தமிழீழ மக்களையும், தமிழக மீனவர்களையும் படுகொலை செய்யும் சிங்கள அரசைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம். அம்பத்தூர் தமிழ் இலக்கியப் பேரவை நாளை சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு தொடக்கி வைக்கின்றார்



Thursday, December 11, 2008

2ம் ஆண்டு நினைவலைகள்

கடிதம் எழுதும் நிகழ்வு

பிரித்தானியாவில் "தோள் கொடுப்போம்"

பரிசில் "மாபெரும் ஒன்றுகூடல்"

சுவிசில் "நீதியா நியாயமா?"

துளுசில் "கவனயீர்ப்பு போராட்டம்"

ரொரன்ரோவில் முத்தமிழ் எழுச்சிக்கலை நிகழ்வு

2ம் ஆண்டு நினைவு வணக்கம்

Wednesday, October 29, 2008

Awareness Week-November 02-09

Saturday, October 18, 2008

தாய்மடி தாங்குவோம்

Sunday, October 05, 2008

வன்னியில் பொது மக்கள் மீதான விமானத் தாக்குதல்களை கண்டித்து லண்டனில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட வுள்ளது.


வன்னியில் பொது மக்கள் மீதான விமானத் தாக்குதல்களை கண்டித்து லண்டனில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட வுள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை லண்டன் நகரில் உள்ள பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டிடத்தின்; முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது

மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெறவுள்ள போராட்டத்தில் அனைவரையும் பங்கேற்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடைகால விடுமுறை கழிந்து எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பிரித்தானிய நாடாளுமன்றம் கூடுவதால், அதிகளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வருகை தரும் நேரத்தில் இந்தப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் வாழும் ஒவ்வொரு தமிழனும் இதனை தமது தார்மீகக் கடமையாக ஏற்று, தமது ஒற்றுமையையும், விருப்பையும் பிரித்தானிய அரசியல் கட்சிகளுக்கும், அனைத்துலக சமுகத்திற்கும் அனைத்துலக ஊடகங்களுக்கும் வெளிப்படுத்த முன்வரவேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

Wednesday, October 01, 2008

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வருகிற அக்டோபர் 2ஆம் தேதி ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வருகிற அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாளன்று சென்னையில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நடைபெறும் இந்த உண்ணாவிரத்தில் தமிழ்நாட்லுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழர்களுக்கான அமைப்புகளும் பங்கேற்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் அழைப்பு விடுத்திருந்தார்.

தாயக உறவுகளுக்காக TORONTO அனைத்து கலை பண்பாடுக்கழகங்களும் இணைந்து வழங்கும் 27 மணி நேர முத்தமிழ் விழா

டெனமார்க் வாழ் உறவுகளுக்கு தமிழர்புனர்வாழ்வுக்கழகம் விடுக்கும் வேண்டுகோள்

இலங்கை தமிழர் வரலாறு நூல் அறிமுகமும் வெளியீடும் MONTREAL

Monday, September 29, 2008

இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறுநூல் அறிமுகமும் வெளியீடும்


கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய:

'இலங்கையில் தமிழர்: ஒரு முழுமையான வரலாறு"

நூல் அறிமுகமும் வெளியீடும்

இருமொழிகளில் (தமிழ், ஆங்கிலம்) கி.மு 300 இலிருந்து கி.பி 2000 வரையான 2300 ஆண்டு காலத்தின் ஆய்வுப் படைப்பு!

வரலாற்றுப் பதிவு:

இனத்தின் இருப்பிற்கு வழிகாட்டி!

காலம்: 03.10.2008
வெள்ளி மாலை 6:30மணி

இடம்: ஸ்காபரோ நகரமண்டப உள்ளரங்கு

Scarborough Civic Centre, 150 Borough Drive

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Friday, September 26, 2008

கனடிய ஒலி வழி ஊடகங்களின் ஒன்றிணைந்த ஒலிபரப்பு

நோர்வேயில் எதிர்வரும் திங்கள் அடையாள உண்ணாநிலை போராட்டம்

தமிழ் மக்கள் மீது இன அழிப்புப் போரினைக் கட்டவிழ்த்து விட்டுள்ள சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து நோர்வேயில் உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளன.
நோர்வே நாடாளுமன்ற முன்றலில் எதிர்வரும் திங்கட்கிழமை (29.09.08) காலை 8:00 மணிமுதல் அடுத்த நாள் பிற்பகல் 3:00 மணி வரையான 32 மணித்தியாலங்களில் இந்த அடையாள உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்புப் போராட்டமும் நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் தமிழ் மக்களுக்கான வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மரணத்துள் வாழும் தமிழீழ மக்களின் அவலங்களை அறிந்திருந்தும், பாராமுகமாய் இருக்கும் உலகின் மனச்சாட்சியை கேள்வி கேட்கும் முகமாக இக்கவனயீர்ப்பினை ஏற்பாடு செய்கின்றோம்.

ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அனைத்துலக உதவி நிறுவனங்களை வன்னி மண்ணிலிருந்து வெளியேற்றி, எமது மக்கள் மீது இன அழிப்பு (Genocide) போரினை கட்டவிழ்த்துவிட்டுள்ள சிறிலங்கா பேரினவாத அரசைக் கண்டிக்குமாறு கோரியும்,

எமது மக்களுக்கு ஆதரவாக, அவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் உணர்வெழுச்சியை வெளிப்படுத்தும் முகமாகவும் அணிதிரள்வோம்.

இக்கவனயீர்ப்பின் அவசரத்தையும் அவசியத்தையும் உணர்ந்து, வேலைத்தளங்களில் முன்கூட்டியே விடுப்பினைப் பெற்று, மரணத்துள் வாழும் எமது மக்களின் உரிமைகளுக்காக வயது பேதமின்றி அனைவரும் இந்த அடையாள உண்ணாநிலைப் போராட்டத்திலும் கவனயீர்ப் போராட்டத்திலும் அணிதிரள்வோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, September 24, 2008

தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்காக கனடா தமிழ் இளையோர் 30 மணிநேர உண்ணாநிலை

கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ பெரும்பாகத்தில் தமிழ் இளையோர்கள் 30 மணிநேர உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வினை நடத்தவுள்ளனர்.

தாயகத்தில் இடம்பெயர்ந்து உண்ண உணவின்றி வாடும் மக்களுக்கு உணவு வழங்கிட ஆதரவு தெரிவிக்குமாறு கோரி இந்த உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வினை கனடா வாழ் தமிழ் இளையோர்கள் தொடங்கவுள்ளனர்.

இந்த நிகழ்வு

10865 Bayview Ave இல் அமைந்திருக்கும் றிச்மன்ட்கில் பிள்ளையார் கோவிலில் எதிர்வரும்

வெள்ளிக்கிழமை (26.09.08) மாலை 4:00 மணி தொடக்கம்

அடுத்த நாள் சனிக்கிழமை இரவு 10:00 மணிவரை நடைபெறவுள்ளது.


நிகழ்வில் கனடா வாழ் தமிழ் மக்கள் அனைவரும் பங்கேற்று தாயகத்தில் அல்லலுறும் எமது மக்களுக்கு ஆதரவு வழங்கிடுமாறு தமிழ் இளையோர் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

நிகழ்வு தொடர்பான மேலதிக விவரங்களை அறிய விரும்புவோர் 647 -834 1075

இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம் என தமிழ் இளையோர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

24/09/2008 அன்று ஐ.நா. முன்றலில் வன்னி மக்களின் அவலம் கவனயீர்ப்பு போராட்டம்.

26/10/2008 அன்று சுவிசில் பாடும்குயில் 2008

04/10/2008 அன்று ஆவுஸ்ரேலியாவில் லெப்.கேணல் திலீபன் நினைவெழுச்சி நாள்

30/09/2008 அன்று பிரான்சில் குறும்பட விழா 2008

27/09/2008 அன்று நோர்வேயில் நினைவுக் கலைமாலை

27/09/2008 அன்று சுவிசில் எழுச்சி விழா 2008

26/09/2008 அன்று கனடாவில் தியாக தீபக் கலைமாலை

05/9/2008 தொடக்கம் 05/10/2008 வரை கனடாவில் காத்திருக்கும் உறவுகளுக்கு கைகொடுப்போம்

Blog Archive