வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி கனடாவில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அமைப்பு நடாத்தும் தமிழ்த் தேசியத்திற்க்கான மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்கும் ஒன்றுகூடல்.
இடம் 733 Birch mount Road “கனடா கந்தசாமி கோயில் மண்டபம்”
சுவிஸ் ஈழத்தமிழரவை - சுவிஸ் பூராகவும் 40 வரையிலான வேட்பாளர்கள் தேர்தல் களத்தில்!!
அன்பார்ந்த தமிழீழ மக்களே!
இன்னும் சில தினங்களில் சுவிஸ்ஈழத்தமிழரவைக்கான தேர்தல் நடைபெறுகின்றது. பெரும்பாண்மையான இளையதலைமுறையினர் மற்றும் சுவிஸ்பிரயைகள் இத்தேர்தலில் வேட்பாளர்களாக தம்மை பதிவு செய்திருப்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.
வரும் 28.03.2010 வாக்குச்சாவடியில் எமது எதிர்காலத்தை தீர்மானிக்க சுவிஸ்வாழ் தமிழரின் தனித்துவத்தை நிலைநாட்ட சகல மக்களும் தயாராகும் வண்ணம் அன்புடன் வேண்டுகின்றோம்.
எமது தாயகதேசத்தின் வளர்ச்சிக்கும் விடுதலைக்கும் பெரும் பொருள் ஈட்டி கொடுத்த சுவிஸ்தமிழராகிய நாம் ஐனநாயக விழுமியங்களை காத்து தமது அரசியல் பண்பை வாக்குச்சாவடியில் நிரூபிக்க வேண்டும்.
காத்திரமான ஈழத்தமிழரவையின் உருவாக்கமே தமிழரின் எதிர்கால மேம்பாட்டிற்கு அடித்தளமாகவும் உந்துசக்தியாகவும் விளங்கும்!! உங்கள் பிரதிநிதி யார் என்பதை வாக்குச்சாவடியில் சொல்லுங்கள்!!அமையட்டும் ஈழத்தமிழரவை நிலைநிறுத்துவோம் சுவிஸ் தமிழர் தனித்துவத்தை!!
சுவிஸ் தேர்தல் குழுவினர்
Swiss Tamil Diaspora, C/O Tamil Election Switzerland, Postfach 1511, 8021 Zürich
இலங்கையில் கருணையற்ற யுத்தம் நடந்துகொண்டு இருந்தபோது அதை ஒரு சினிமாபோல உலகம் பார்த்தது. அந்தக் கொடூரம் 'ஆபரேஷன் எல்லா ளன்' என்ற திரைப்படமாக உருவாகியிருக்கிறது!
வெகு விரைவில் உலகத் திரையரங்குகளில் எல்லாளன்.... எல்லாளன் தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தின் பதிவு முழுமையான கற்பனை கலப்பில்லாத வரலாற்று திரைப்படம். ஒரு விடுதலை போராட்டத்தை நடத்துபவர்களே தங்கள் போராட்டத்தின் ஒரு நிகழ்வை தங்கள் மண்ணில் தாங்களே நடித்து பதிவு செய்துள்ள உன்னதம். இப்படத்தில் பணியாற்றிய பெரும்பாலோர் தற்போது உயிருடன் இல்லாத நிலையில் அவர்கள் வாழ்வின் சாட்சியாகவும் வீரம் செறிந்த தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தின் சாட்சியாகவும் இதோ உங்கள் முன் காண தவறாதீர்கள் . எங்களது மாவீர செல்வங்களின் கனவு ஒரு நாள் பலிக்கும்.
எல்லாளன் நடவடிக்கை தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய முக்கிய விமான படை தளமான அனுராதபுரம் மீது தமிழ் ஈழ விடுதலை புலிகளின் தற்கொடை தாக்குதல் அணி நடத்திய இத் தாக்குதல். விடுதலை புலிகளின் திறனையும் நுட்பமான திட்டமிடுதலையும் உலகிற்கு எடுத்து காட்டிய நிகழ்வு கரும்புலிகள் தங்கள் உயிரை ஈர்ந்து நடத்திய இத் தாக்குதலை எவ்வித கற்பனை கலப்பும் இன்றி அபப்டியே மீண்டும் ஒரு முறை கண் முன் நடத்தி காட்டுவது தான் '' எல்லாளன் '' எனும் இத் திரை காவியம். ஒரு வெற்றிக்கு பின் உள்ள திட்டமிடுதலும் போராளிகளின் ஈகத்திற்கு பின் உள்ள அவர்கள் உள்ளத்தின் ஈரமும் உலகம் அறியாதது ஒரு சில மணி நேர தாக்குதலுக்காக போராளிகள் எத்தனை நாட்கள் பயிற்சி எனும் தவம் புரிந்துள்ளனர் என்பதும் நாட்டின் விடுதலைக்காய் தன் உயிரை உவந்து அளிக்கும் ஒவ்வொரு போராளியின் பின்னும் நேசமும் பாசமும் கொண்ட குடும்பமும், நட்பும், ஏன் காதலும் கூட இருக்கும் என்பது பலர் அறியாதது. இத் திரை காவியம் ஈரமும் வீரமும் கொண்ட கவிதையாய் பதிவு செய்துள்ள வாழ்க்கை.
நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை பிறக்கும்
உலகில் எத்தனையோ விடுதலை இயக்கங்கள் உண்டு. அவற்றின் போர்முறை என்பது கெரில்லா யுத்தம்தான். ஆனால், தரைப் படை, கடற் படை, வான் படை என முப்படைகளைக்கொண்டு மரபுரீதியிலான ராணுவமாகத் திகழ்ந்தது விடுதலைப் புலிகள் மட்டுமே. வான் புலிகளின் தாக்குதலில் முக்கியத்துவம் வாய்ந்தது அனுராதபுரம் விமானதளத் தாக் குதல். 21 கரும்புலிகள் நடத்திய தாக்குதலில், இலங்கை அரசின் அனுராதபுரம் விமானதளம் சீர்குலைந்தது. தாக்குதலுக்குப் புலிகள் இட்டிருந்த பெயர் 'ஆபரேஷன் எல்லாளன்'!
ஈழ யுத்தம் இறுதியில் இருந்த சமயத்தில் ஷெல் அடிகளுக்கும், ஆர்ட்டிலெறி குண்டு வீச்சுக்களுக்கும் மத்தியில் எடுக்கப்பட்ட இந்த சினிமாவில் நடித்துஇருப்பதும் புலிகள்தான். ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகளில் வெளியாகி இருக்கும் 'ஆபரேஷன் எல்லாளன்' திரைப்படத்தில் நடித்தவர்களில் பெரும்பாலானோர் இன்று உயிரோடு இல்லை. யுத்தம் அவர்களைப் பொசுக்கித் தின்று விட்டது.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவா ளர் தமிழகத்தைச் சேர்ந்த சந்தோஷ். ''2007 அக்டோபரில் அனுராதபுரம் தாக்குதல் நடந்தது. சில மாதங்கள் கழித்து அனுராதபுரம் தாக்குதலை அப்படியே சினிமாவாக்க வேண்டும் என்று எனக்கு அழைப்பு வந்தது. 2008 பிப்ரவரியில் நான் ஈழத்துக்குச் சென்றேன். அப்போது அங்கு நிகழ்ந்துகொண்டு இருந்த கடும் யுத்தம் உலகின் கண்களுக்கு அவ்வள வாகத் தெரியவில்லை. எத்திக்கும் எந்த நேரமும் முழங்கும் குண்டு சத்தங்களுக்கு நடுவே படப்பிடிப்பைத் துவக்கினோம். அனுராதபுரம் தாக்குதலில் பங்குபெற்ற புலிகளின் டைரிகளை முழுமையாகப் படித்து, அவர்களின் உறவினர்களிடம் பேசி, முழுக்க முழுக்க உண்மைக்கு மிக நெருக்கமான திரைக்கதை எங்கள் கைகளில் இருந்தது. 21 புலிகளை நடிப்பதற்காகத் தேர்வு செய்தோம். தாக்குதல் சமயத்தில் புலிகள் வாக்கி டாக்கியில் தலைமையுடன் மேற்கொண்ட உரையாடல்களின் குரல் பதிவுகள் எங்களிடம் இருந்தன.
அடுத்த நொடி உயிர் போய்விடும் என்று உறுதியாகத் தெரிந்த நிலையிலும், தாய் மண்ணின் நலனுக்காக அவர்களின் மரணத்தறுவாய் முயற்சிகள் எங்களைச் சிலிர்க்கச்செய்தன. ஆனையிறவில் படப்பிடிப்பு நடக்கும்போது ராணுவம் குண்டு வீசியதில் மேஜர் புகழ்மாறன், தவா, அகிலன், ரவி ஆகிய நால்வர் படப்பிடிப்புத் தளத்திலேயே இறந்துபோனார்கள். நாட்கள் போகப் போக, நடித்தவர்களும் பணிபுரிந்தவர்களும் ஒவ்வொருவராக எங்களைவிட்டுப் பிரிந்துபோயினர். ஆனாலும், முழுமையாகத் திட்டமிட்டபடி படப் பிடிப்பை நடத்தி முடித்தோம்.
முல்லைத் தீவின் காட்டுப் பகுதிக்குள் பல ஏக்கர் பரப்பளவில் அப்படியே அனுராதபுரம் விமானதளம் போல செட் போடப்பட்டு இருந்தது. விமானங்கள், ஓடுதளங்கள் எல்லாமே அச்சு அசல். அவற்றை சேட்டிலைட் மூலம் பார்த்த இலங்கை அரசு, தங்களால் யூகிக்க முடியாத அளவுக்குப் புலிகளிடம் விமான பலம் இருப்பதாக அஞ்சியது. உண்மையான விமானதளம் என்று நினைத்து, அதன் மீதும் குண்டு வீசினார்கள். இலங்கைத் தீவில் கால் நூற்றாண்டுக்கும் மேல் நடந்த யுத்தத்தின் இறுதியில் புலிகள் வீழ்த்தப்பட்டு இருந்தபோதிலும் புலிகளின் வீரத்துக்கு இந்தத் திரைப்படம் ஒரு சாட்சி. உலகிலேயே ஒரு யுத் தத்தை நடத்தியவர்கள், அந்த யுத்த களத்திலேயே நடித்தும், பணிபுரிந்தும் உருவாக்கிய திரைப்படம் இது ஒன்றாகத்தான் இருக்கும்!'' என்கிறார் சந்தோஷ்!
வட்டுக்கோட்டைத்தீர்மானத்தின் மீள்உறுதிப்படுத்தும் கருத்துக்கணிப்பு தேர்தல் எதிர்வரும் 28ம் திகதியில் டென்மார்க்கிலும், அதனைத்தொடர்ந்து இத்தாலி நாட்டில் நடைபெறவிருக்கும் மாபெரும் இலட்சிய தமிழரின் பெருவிருப்பம், வெற்றியளிக்க பிரான்சு வாழ் தமிழ்மக்கள் தமது இதயபூர்வமான வாழ்த்துதல்களை முதற்கண் தெரிவித்துக்கொள்கின்றது.
உலகத்தின் எந்தவொரு மூலைக்கு சென்றாலும் தமிழீழ மக்களாகிய எமது பெருவிருப்பம் தமிழீழத் தாயகமே என்பதை மீண்டும் ஒருமுறை சனநாயக வழித்தேர்தல் மூலம் சர்வதேசத்திற்கு சொல்கின்றோம். அந்த உண்மைச்செயற்பாட்டினை முதன்முதலில் பிரான்சு நாட்டில் முன்னெடுத்து அதற்கடுத்ததாக நோர்வே நாட்டிலும் மீண்டும் பிரான்சு நாட்டிலும், அதனைத் தொடர்ந்து இன்று உலகம் முழுவதும் தமிழர்கள் பரந்து வாழும் நாடுகளில் எல்லாம் ஓருமித்த குரலில் தமது வாக்களிப்பு மூலம் உலகத்திற்கு சொல்லப்பட்டுவிட்டது. இந்த வகையில் எதிர்வரும் 28ம் திகதி டென்மார்க்கிலும், அதனைத் தொடர்ந்து இத்தாலியிலும் நடைபெறவுள்ளதும் அதற்கான ஆதரவுகளை அங்குள்ள அரசும், அரசசார்பற்ற அமைப்புக்களும் வழங்குவது இன்னும் எமது இலட்சியத்தாகத்திற்கு வலிமை சேர்ப்பதாக அமைகின்றது.
கடந்த காலங்களில் தமிழீழ மக்களின் இனப்பிரச்சனையில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகளில் டென்மார்க் அரசும், அங்கு வாழும் தமிழ்மக்களும் காத்திரமான பங்கை வகித்திருக்கின்றனர். அதேபோலவே இத்தாலி நாட்டிலும் அங்கு வாழும் சிங்களப் பெருன்பான்மையானவர்களுக்கு ( சிறீலங்காவுக்கு அடுத்தபடியாக சிங்களவர்கள் அதிகம்வாழும் நாடு) மத்தியில் தமிழர்களின் உணர்வுகளை மதித்து சுனாமி அநர்த்த நேரத்தில் உடனடியான உதவியை தமிழீழ மக்களின் ஏகபிரதிநிதிகளான விடுதலைப்புலிகளிடம் கொண்டு சென்று வழங்கியதும், அவர்களை விருந்தினர்களாக தமது நாட்டு அழைத்து தமிழ்மக்களுக்கு உதவும் பல செயற்திட்டங்களை மேற்கொண்ட பெருமையும் இத்தாலிய நாட்டிற்கு சாரும்.
இந்த வகையில் டென்மார்க், இத்தாலி நாடுகளில் வாழும் தமிழீழ மக்கள் நடைபெறவிருக்கும் கருத்துக்கணிப்புத்தேர்தலில் ஏனைய நாடுகளில் எமது மக்கள் வழங்கிய ஆணையோடு தமது தாயகம் கொண்ட மனஎண்ணப்பாட்டினை தமது வாக்களிப்பின் மூலம் வழங்கி பெருமைசேர்ப்பார்கள். தாயகத்தில் இருக்கும் தமிழ் அரசியல் வாதிகளின் குழப்பமான இன்றைய சூழ்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களின் உறுதியான சனநாயக வழி தெரிவிப்பிற்கு சர்வதேசம் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். எனவே இந்த காத்திரமான நிலையை தமிழீழ மக்கள் நாம் உணர்ந்து ஒற்றுமையாக ஓரணியில் நின்று உரத்து குரலில் தமிழரின் தாகம் தமிழீழ தாயகமே என்று கூறுவோம், கரங்கொடுப்போம். வாக்களிப்போம், வெற்றிகொள்வோம்
பிரான்சு வாழ் தமிழீழ மக்களின் சார்பில் தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு
பல நூற்றாண்டு காலம் மேற்கத்தேய ஆதிக்க சக்திகளாலும் கடந்த 62 ஆண்டுகளாக சிங்கள அரசாலும் அடிமைப்படுத்தப்பட்டு சொல்லொணா துயரங்களை அனுபவித்துவரும் தமிழீழமக்கள். தமது பூர்வீகமண்ணில் சுதந்திரமாக ஏனைய அனைத்துலக மக்கள் அனுபவிக்கும் உரிமைகளுடன் வாழ்வது அவர்கள் தமது பூர்வீக தாயகத்தில் மீள அமைக்கும் தமிழீழத் தனியரசில் தான் முடியும் என குடிநாயக வழியில் வரலாற்றுத் தீர்ப்பெழுதிய நோர்வே, பிரான்சு, கனடா, சுவிர்சலாந்து, ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் பிரித்தானிய வாழ் தமிழீழமக்களைத் தொடர்ந்து. டென்மார்க் வாழ் தமிழீழமக்களும் வரும் 28ம் நாள் தமிழீழ தனியரசை வலியுறுத்தி வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பை நடாத்தவுள்ளனர்.
முள்ளிவாய்காலுடன் முடிந்துவிட்டது தமிழர்களின் தமிழீழக் கோரிக்கை என்றும் தமிழீழக்கோரிக்கை என்பது தனி ஒரு மனிதனின் கோரிக்கையெனவும் கொக்கரிக்கும் சிறீலங்கா அரசிற்கும் தமது சுய பிராந்திய நலனை மட்டும் கருத்தில் கொண்டுள்ள சில வல்லரசுகளுக்கும், தமிழ் மக்களின் குடிநாயக பிரதிநிதிகளென்ற புகழாரத்துடன் அம்மக்கள் வழங்கிய சுதந்திர தமிழீழத்திற்கான வட்டுக்கோட்டைத் தீர்மானமெனும் மக்களாணையை ஏற்றுக்கொள்ளாத சில அடிமை அரசியல்வாதிகளிற்கும் தமிழ்பேசும் ஈழத்துமக்களுக்கான ஓரே ஒரு பாதுகாப்பான தீர்வு சுதந்திர தமிழீழமே என குடிநாயக வழியில் இடித்துக்கூறவேண்டிய வரலாற்று கடமையை நாம் கொண்டுள்ளோம். எப்படி நோர்வே, பிரான்சு, கனடா, சுவிர்சலாந்து, ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் பிரித்தானிய போன்ற நாடுகளில் இக்கருத்துக்கணிப்பு தமிழீழ மக்களின் ஆணையுடன் வெற்றிபெற்றதோ அதேபோன்று நாம் வாழும் டென்மார்க்; மண்ணிலும் அமோக வெற்றி பெறுமென்பது திண்ணம்.
தமிழீழக்கோரிக்கை என்பது 1977ம் ஆண்டு இலங்கைத்தீவின் அனைத்து தமிழ்பேசும் மக்களின் ஆணைபெற்ற கோரிக்கை என்பதை 2002ம் ஆண்டு தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் கலந்துகொண்ட பத்திரகையாளர் சந்திப்பில் விரிவாக தமிழில் எடுத்துரைத்ததுடன் தமிழீழதேசத்தின் குரல் பாலாஅண்ணா ஆங்கிலத்திலும் எடுத்துரைத்திருந்தார்.
அத்துடன் தமிழ்பேசும் மக்களாகிய நாம் கடந்த பல தசாப்தங்களாக கோரிவரும் இறையாண்மையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையானது இவ்வுலகத்தால் மறுக்கமுடியாத கோரிக்கையாகும். ஆயினும் இன்றைய பூகோள அரசியலில் குருட்டுத்தனமான மதவாதிய பயங்கரவாத்திற்கும், நியாயமான சுயநிர்ணயத்துக்கான விடுதலைப்பேராட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அனைத்துலகம் நியாயமான சுயநிர்ணயத்துக்கான விடுதலைப்போராட்டங்களை தமது பூகோள நலன்களுக்காக பயங்கரவாதிகளென்று பச்சைகுத்தி அழிக்க முயலுகின்றார்கள் என்பது எமது போராட்டம் எமக்குணர்த்திய யதார்த்தமான உண்மையாகும்.
ஆயினும் கடலில் மிதக்கும் படகு நிலையாக எப்படி நிற்காதோ அதேபோன்று உலக அரசியலும் ஓரே பாதையில் செல்லாது. தமிழ் மக்கள் கொள்கையிலும் இலட்சியத்திலும் ஒன்றுபட்டு தமது தமிழீழத்திற்கான விருப்பை மீண்டும் அனைத்துலகம் தான் விளங்கிக்கொள்ளக் கூடிய பாதையென பறைசாற்றிக் கொண்டுள்ள குடிநாயகப் பாதையில் இடித்துக்கூற தமிழீழ மக்களாகிய நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
அதன் முதற்படியாகவே இவ் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் சுதந்திர தமிழீழத்துக்கான வாக்கெடுப்பு நடாத்தப்படவுள்ளது. ஆகவே அனைத்து டென்மார்க் வாழ் தமிழ் பேசும் மக்களும் தவறாது கலந்துகொண்டு வாக்களிக்கவேண்டியது வரலாற்றுக் கடைமையாகிறது. டென்மார்க்கின் 32 நகரங்களில் இந்த வாக்கெடுப்பு நடைபெறும்.
மேலதிக விபரமான தகவல்கள் விரைவில் தொடர்ச்சியாக எம்மால் எமது இணையத்தளத்தில் பதிவுசெய்யப்படும். தேர்தல் குழு டென்மார்க் தமிழர் பேரவை. இணையத்தளம் : www.tamilvalg.dk தேர்தல் குழு, டென்மார்க் தமிழர் பேரவை. மேலதிக தொடர்புகளுக்கு : 52173671
ஈழத்தமிழர் புல்ம்பெயர்ந்து வாழும் தேசமெங்கிலும் அதிகரித்துவரும் மக்கள் எழுச்சியுடன் நடைபெற்றுவரும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்பூக்கள் இங்கு அவுஸ்த்திரேலியாவிலும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல் ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சிட்னி, மெல்பேண், பிறிஸ்பேன், கன்பரா, பேத் மற்றும் அடெலெயிட் போன்ற முக்கிய நகரங்களில் வாக்குச் சாவடிகள் மூலமாகவும், தபால் வாக்குப்பதிவு மூலமாகவும் இக்கருத்துக்கணிப்பு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
வருகிற சித்திரை மாதம் 17 ஆம், 18 ஆம் தேதிகளில் இவ்வாக்கெடுப்பு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளில் இதன் அமைப்பாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இதன் முதல் படியாக இங்கே இயங்கும் சமூக வானொலிகள், பத்திரிக்கைகள், இணையத் தளங்கள் என்பவற்றில் இக்கருத்துக்கணிப்புப் பற்றிய அறிவித்தல்களும், கருத்துப் பகிர்வுகளும் இவ்வாரம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
தேசிய உணர்வுடைய அதிகளவான தமிழர்கள் வாக்களிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் இக்கருத்துக்கணிப்பை வெற்றிபெறச் செய்வது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். என்று தேர்தல் ஏற்பாட்டுக்குழுவால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
சென்னை தாம்பரத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாவீரன் முத்துக்குமார் வீரவணக்க சூளுரைப் பொதுக்கூட்டம் வரும் சனிக்கிழமை(13.02.2009) அன்று மாலை நடக்கிறது.
தாம்பரம் பாரதித் திடலில் நடைபெறும் இப்பொதுக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்குகிறார். தாம்பரம் கிளைச் செயலாளர் தமிழ்க்கனல் வரவேற்புரை நிகழ்த்துகிறார். கவிஞர் கவிபாஸ்கர் பாவீச்சு நிகழ்த்துகிறார்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், ஈழத்து உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, பா.ஆரோக்கியசாமி(த.தே.பொ.க.) ஆகியோர் சிறப்புரை வழங்குகின்றனர்.
தமிழக இளைஞர் முன்னணி அமைப்பாளர் மா.சாந்தக்குமார் நன்றியுரை நிகழ்த்துவார்.
கனடாத் தமிழர் தேசிய அவைக்குத் தயாரிக்கப்பட்டுள்ள யாப்பு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான கூட்டம் கனடியத்தமிழ் தேசிய அவையின் தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக்குழுவினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
வேங்கைளின் மூத்த தளபதியே
நெருப்பாற்றில் தீக்குளித்த தளபதிகள்
மாவீரர் தினப் பாடல்
முள்ளிவாய்கால் மண்ணே
மாவீரர்களுக்கு இணையத்தில் வீரவணக்கம்
இறுதி யுத்தத்தின் முடிவும் தலைவரின் இறுதி வியூகமும் -காணொளிகள்
தமிழர்களை தலை நிமிர்த்திய தலைவன் பிரபாகரன் -காணொளிகள்