Showing posts with label பிரான்சு. Show all posts
Showing posts with label பிரான்சு. Show all posts

Tuesday, November 02, 2010

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சு.ப தமிழ்ச்செல்வன் சிலை திறப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் சிலை பிரான்ஸ் நாட்டில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இச் சிலை தொடர்பாக நகர மேயருக்கு இலங்கை அரசு தனது ஆட்சேபனையைத் தெரிவித்தது இருப்பினும், நகரமேயர் முன் நிலையில் இச் சிலை இன்று உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது:















Friday, October 29, 2010

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் சிலை திறப்பு வைபவம்

தார்மீகக் கடமையாய்த் தரணியெங்கும் சமாதானப் பேச்சுக்காய்த் தன்னை அர்ப்பணித்த தியாகதீபம் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் ஞாபகார்த்தச்சிலை திறக்கும் வைபவம் 01.11.2010 திங்கள் பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

http://www.sangathie.com/uploads/images/2010/01%28nisan%29/291010%20010.jpg

Saturday, October 23, 2010

மாவீரர்களின் அடையாளங்களை சிறீலங்கா அழித்துவரும் நிலையில் பிரான்சில் சுப.தமிழ்ச்செல்வனுக்கு சிலை வைப்பதற்கு ஏற்பாடு


உலக போரியில் விதிமுறைகளுக்கு முரணாக, மாவீரர்களின் கல்லறைகளையும், நினைவுதூபிகளையும் இருந்த இடம்தெரியாது சிறீலங்கா அரசின் இராணுவம் சிதைத்தழித்துவரும் நிலையில், பிரான்சின் லாகூர்நெப் நகரில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு சிலை ஒன்றை அமைப்பதற்கு அம்மாநகர சபை அனுமதி வழங்கியுள்ளது.

சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தன்று இச்சிலை திறந்துவைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக லா கூர்நெவ் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

2007ம் ஆண்டு நவம்பர் இரண்டாம் நாள் லா கூர்நெவ் நகரசபை, தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து மிகப் பிரமாண்டமாக தமிழ்க் கிராமம் என்ற நிகழ்வு ஒன்றை நடாத்தியது. அதில் பிரான்சில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து கொண்டன.

அந்நிகழ்வுக்கு லா கூர்நெவ் நகரசபை எமது சமாதான தூதுவராக இருந்த சுப.தமிழ்ச்செல்வன் அவர்களை பிரதம விருந்தினராக அழைத்திருந்தனர். அவ்வேளையில் எம் தாயகத்தில் பிரச்சினை காரணமாக அவரால் வர முடியாது என்றும், அன்றைய நாளில் தொலைபேசியூடாக வாழ்த்துக் கூறுவதாகவும் சுப.தமிழ்ச்செல்வன் அவர்கள் கூறியிருந்தார்.

ஆனால் துரதிஸ்டமாக அன்றைய நாளே அவர் வீர மரணத்தைத் தழுவிக் கொண்டார். இந்நிலையில், லா கூர்நெவ் நகரசபை நகரபிதா அன்றைய நாளில் அவரின் மறைவிற்கு வீரவணக்கத்தை செலுத்திக் கொண்டு நிகழ்வுகளை நடாத்தினார்.

தற்போது சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் மூன்றாமாண்டு நினைவு நாள் அன்று அவருக்கான நினைவுச் சிலையினை அமைக்க லா கூர்நெவ் நகரசபை ஏற்கனவே அவரது நினைவாக நடப்பட்டுள்ள மரத்திற்கு அருகில் இடம் ஒதுக்கித் தந்துள்ளது.

லா கூர்நெவ் தமிழ்ச்சங்கமும் Le sens de l'art (la galerie) இணைந்து சுப.தமிழ்ச்செல்வனின் சிலையினை அமைத்து வருகின்றனர். எனவே பேரன்பு கொண்ட மக்களே அனைவரும் வரும் நவம்பர் மாதம் முதலாம் நாள் லா கூர்நெவ் நகர சபை முன்னால் காலை 11 மணிக்கு வருகைதருமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளனர்.

Friday, October 22, 2010

பிரான்சின் நாடுகடந்த அரசின் மக்கள் பிரதிநிதிகளும் - பிரான்ஸ் மக்கள் பேரவையும் முதல் முறையாக ஒன்றாய் நடத்தும் ஒன்று கூடல்

பிரான்சில் ஒன்றாய் எழுவோம்

பிரான்சின் நாடுகடந்த அரசின் மக்கள் பிரதிநிதிகளும் - பிரான்ஸ் மக்கள் பேரவையும் முதல் முறையாக ஒன்றாய் நடத்தும் ஒன்று கூடல் எதிர்வரும் 31.10.10 ஞாயிற்றுக்கிழமை பகல் 2.00 மணிக்கு 50rue de Torcy, 75018 Paris (M°: Marx Dormy), மண்டபத்தில் நடைபெறுகிறது.

மக்கள் பிரதிநிதிகள் மக்களுடன் மக்களாக மக்கள் மன்றத்தில் எடுக்கும் சத்தியப் பிரமாணம்.

பிரான்ஸ வாழ் அனைத்து தமிழ் மக்களையும் இக் கலந்துரையாடிலில் பங்குபற்றுமாறு, நாடுகடந்த அரசின் பிரதிநிதிகளும், பிரான்ஸ் மக்கள் பேரவையும் அழைத்துள்ளனர்.

Wednesday, July 28, 2010

பிரான்ஸ் தமிழ் மக்களே! சிவந்தனது மனிதநேய நடை பயணத்தில் இணையுங்கள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நான்காவது நாளாக மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ள சிவந்தனுடன் பிரான்ஸ் தமிழ் உறவுகள் இணைந்துகொள்ள வேண்டும் என, அங்குள்ள தமிழ் அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.

சிவந்தனின் ஐ.நா நோக்கிய நடை பயணத்திற்கு தெம்பூட்ட மக்களை அழைக்கும் உதவியாளர்கள்

பிரான்சின் கடற்கரையான கலையை நேற்றிரவு 8:00 மணியளவில் சென்றடைந்திருந்த சிவந்தன் சிறிய தூரம் தனது நடை பயணத்தை மேற்கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஓய்வெடுத்த அவர் இன்று காலை முதல் அதே உற்சாகத்துடன் நடந்த செல்லுகின்றார்.





காலை 8:30 மணியவில் புறப்பட்ட அவர், ஐரோப்பிய நேரம் பிற்பகல் ஒரு மணிவரை 22 கிலோமீற்றர் நடந்து சென்றுள்ளார். இதுவரை Calais, Guines, Landerethun,-le-nord, Elinghen, Le wast போன்ற இடங்களைக் கடந்து சென்றுள்ள சிவந்தன் Desvres என்ற இடத்தை அடைவதற்கு இன்னும் 21 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது.
அத்துடன், பிரான்ஸ் தலைநகர் பரிஸை அடைவதற்கு இன்னும் பல நூற்றுக்கணக்கான கிலோமீற்றர்கள் இருப்பதுடன், அங்கிருந்து சுவிற்சர்லாந்து ஜெனீவா நோக்கி நடக்க வேண்டியுள்ளது.

நேற்றிரவு முதல் பிரான்ஸ் தமிழ் மக்கள் சிலர் இணைந்து நடந்து வருகின்ற போதிலும், ஏனைய மக்களும் இணைந்துகொண்டு சிவந்தனின் கோரிக்கைக்கான தமது ஆதரவை வழங்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கீழுள்ள தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொண்டு அவர் எந்த இடத்தில் நடந்து செல்லுகின்றார் என்ற விபரத்தைப் பெற முடியும்.

பிரான்ஸ் – 0033 66 49 79 490

* சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,
* தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,
* மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

சுவிற்சர்லாந்து ஜெனீவா ஈகப்பேரொளி முருகதாசன் திடலை (ஐ.நா மனித உரிமைகள் சபை முன்றலை) எதிர்வரும் 6ஆம் நாள் சிவந்தன் சென்றடைவார் என கணிக்கப்பட்டுள்ளதால், அன்று பிற்பகல் 2:00 மணிக்கு மாபெரும் எழுச்சிக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் மனுக் கையளிப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
















சிவந்தனுடன் மக்கள் இணைய தொடர்பு இல : பிரான்ஸ் - 0033 66 49 79 490

Wednesday, July 21, 2010

பிரான்சில் கறுப்பு யூலை நினைவு நாள் பேரணி 2010

சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது மிகக்கொடுமையான இனப்படுகொலை புரிந்து 1983 யூலை 23 இன்று 27 ஆண்டுகள்.

மானிடநேயம் சிறதும் கூட இல்லாமல் பிஞ்சுக்குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இரக்கமின்றி வெறிபிடித்த விலங்குகளாய் சிங்கள மக்களும் அரசும் இணைந்து தமிழினப்படுகொலையை செய்து முடித்தார்கள்.

தமிழ் மக்களின் இரத்தக்கறை படிந்த பக்கங்களாக இன்னும் வலியைத்தந்துகொண்டிருக்கும் கறுப்பு யூலை கனத்த நாட்கள் என்றும் மறக்கப்பட முடியாதவை.

பிரான்சு வாழ் உறவுகளே நடைபெறவிருக்கும் கறுப்பு யூலை நினைவு நாளில் அனைவரும் பெருந்திரளாய் கலந்து கொள்ளுவோம் வாருங்கள்.

காலம் 27.07.2010 ஞாயிற்றுக்கிழமை.

நேரம் 14.00மணி

இடம்: REPUBLIQUE இருந்து BASTILLE வரை

Thursday, July 08, 2010

பிரான்சு வாழ தமிழீழ மக்களே! நீதி கேட்போம்! வலியுறுத்துவோம்! கண்டிப்போம்!



சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களால் ஐ,நா அலுவலகம் முற்றுகையிடப்பட்டதையும், மனதாபிமான பணியாளர் வெளியேற்ற ப்பட்தையும் கண்டிப்போம்.

ஐ,நாவால கொண்டு வரப்பட்ட'போர்க்குற்ற விசாரணைக்குழுவை நாட்டிற்குள் உள்நுழைய அனுமதிக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கான பூரண ஒத்துழைப்பை சிங்கள அரசு கொடுக்க வேண்டும் என்று கோரியும்

GSP + வரிச்சலுகைக்கு ஐரோப்பிய அரசு விதித்திருந்த நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாது லட்சக்கறக்கான தொழிலாளர்கள் வாழ்வில் துன்பத்தை ஏற்படுத்தி வரும் சிங்கள அரசினை கண்டிப்போம்.

தமிழீழ மக்களின் நியாயமான கோரிக்கையையும் தனித்தமிழீழமே தமிழர்களின் தீர்வாகும் என்பதை ஏற்றுக்கொண்டும், அதற்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி தமிழீழ மக்கள் தடையின்றி அரசியல் நீரோட்டத்தில் சுதந்திரமாக, சனநாயக வழியில் தமது உரிமையை வென்றெடுக்க ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கோரியும்

தமிழின இழிப்புப் போரில் பல உயிர்களை பலி எடுத்தும், பல பெண்கள் மீது மோசமான பாலியல் பலாத்காரத்தை புரிந்த சிங்கள அரசின் 58 டிவிசன் பொறுப்பதிகாரியும், தளபதியுமான ஐகதிசு என்பவர் தற்பொழுது Nஐர்மனியில் அரச துணைத்தூதரக அதிகாரியாக இருந்து வருவதோடு பொய்யான பரப்புரைகளிலும், செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வரும் தளபதி ஐகதீசு நாடுகடத்தப்பட வேண்டும் என்றும்

அரசியல் அடைகலம் தேடிவந்த தமிழ் மக்களை தமிழீழத்தில் உயிர் ஆபத்து இல்லை என்று தமிழர் தரப்புகளால் உறுதிப்படுத்தும் வரை நாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என்று கோரியும்

இவ் ஒன்று கூடல் இடம் பெறவுள்ளது

காலம்: 12.07.2010 திங்கட்கிழமை பி.பகல ; 14.00 மணிக்கு

இடம் பிரான்சு பாராளமன்றம் முன்பாக

Métro: Ligne 12 Assemblée National / Ligne 8 Invalides

RER C: Invalides

Wednesday, June 30, 2010

பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! ஒன்றுகூடுவோம்-- 30.06.2010 புதன்கிழமை

நாம் தோற்று போய்விட்டோமே என்று ஒருபக்கம் நாம் அடங்கிபோய் இருக்க நாம் தோற்று போய்விடோமா என்பதே கேள்வி. "நாமொன்றும் தோற்று போகவில்லை சில சண்டை களங்களை இழந்திருக்கிறோம்.

ஆனால் போர் ஒன்றும் முடிந்துவிடவில்லை." பிரான்சு நாட்டின் ராணுவத் தலைவர் ஜூன் மாதம் 18 ஆம் திகதி 1940 ஆம் ஆண்டு பிரான்சு நாடு ஜேர்மனிய நாசி இராணுவத்தின் ஆயுத பலத்தின் முன் தோல்விகண்ட போது இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்து உலங்கெங்கும் வாழும் பிரெஞ்சு மக்களுக்கும் பிரான்சில் ஜேர்மனிய படையிடம் சிக்கி தமது உரிமைகளை வலியுறுத்த முடியாமல் இருந்த மக்களுக்கும் அவர் என்று விட்ட செய்தி அது.

இன்று நாமும் அதே நிலையில் தான் இருக்கிறோம் ஆனால் நாம் தோற்கவில்லை. 30 வருடங்களுக்கு முன்னும் அதன் பின்பும் அகதியாய் வந்து இறங்கிய ஈழத்து தமிழன் உலகத்தின் சமுக பண்பாட்டு பொருளாதார சகதியாய் உருவாகி இருக்கிறான்.

இன்று நாம் பலம் வாய்ந்த இனமாக உலகெங்கும் பறந்து இருக்கிறோம். அன்று பிரான்சு நாடு அந்நிய படையிடம் அடிமை பட்டிருந்தபோது அன்று ஒரு பிரெஞ்சு சாதாரண ராணுவ அதிகாரி ஒரு இனத்தின் விடுதலைக்காக தான் தஞ்சம் புகுந்த நாட்டில் இருந்து குரல் கொடுத்தான் அந்த இனத்தின் விடுதலைக்கு வழி வகுத்தான்.

இன்று அதே நிலையில் இருக்கும் நாங்கள் சரியான வழியில் சிந்தித்து செயல்படவேண்டும். ஈழம் சாத்தியமா என்று பல பேர் கேட்கலாம் அந்த சந்தேகத்தில் துவண்டு இருக்கலாம் ஆனால் அந்த 40000 போராளிகள் விட்டு சென்ற கனவு அந்த விடுதலைக்காய் அந்த மண்ணுக்கு இறைத்த ரத்தம்.

விடுதலைக்காய் 200000 எம்மக்கள் கொடுத்த தியாகம். இன்று உலகெங்கும் பலம் வாய்த்த இனமாக உருவாகி வரும் நாம் இதில் ஐயம் கொள்ள வேண்டிய தேவை இல்லை. ஈழம் மலரும்! மலர வைப்போம்.

பயணங்கள் கரடு முரடாக இருக்கலாம் ஆனால் முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. அங்கு சிறைபட்டிருக்கும் 12000 க்கு மேலான போராளிகளையும் பல வருடங்களாக ஸ்ரீ லங்கா சிறையில் வாடும் தமிழ் மக்களையும் முகாம்களில் இன்னும் சிறை வைக்கப்படிருக்கும் மக்களையும் விடுதலை செய்யவோ அங்கு அபிவிருத்திகளை செய்யவோ எதுவாக இருந்தாலம் உலக நாடுகளின் பலமான குரல் தான் ஸ்ரீ லங்காவில் அந்த சிங்கள அரசில் மாற்றத்தை கொண்டுவரலாம்.

எம் உறவுகளின் அழிவில் வெற்றி கொண்டாடும் சிங்கள இனம் எமது மாவீரர்களின் சமாதிகள் மக்களின் அழிவுகள் மேல் நின்று விகாரைகள் கட்டும் சிங்கள இனம் அவர்கள் மேல் உலக அழுத்தங்கள் அதிகரிக்கும் போது சிங்கள நாடு உலக நாடுகளிடையே தனிமை படுத்தப்படுபோது இந்த உலகம் தமது தவறுகளை உணரத்துவங்கும் போது தியாங்களை செய்ய எம்மை நாம் தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

இன்று அந்த மாற்றங்கள் நடந்து கொண்டு இருக்கிறது அந்த மாற்றங்களுக்கு அமைய எம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். இன்று போராட்டம் புலம் பெயர்நாடுகளில் இருந்துதான் உருவாகப்போகிறது. அதில் பிரிவினை வாதத்தை வளர்க்கத்தான் ஸ்ரீ லங்கா அரசு அத்தனை வழிவகைகளையும் கையாண்டு கொண்டிருகிறது.

ஈழம் தமிழ் இனத்தின் பொதுக்கனவு. எமது போராட்டம் இன்று ஆயுதம் தாங்கி செல்லவில்லை உலகம் எம்மை கேட்டு கொண்டதுக்கு இறங்க எம் போராட்டம் ஜனநாயகம் ஆக ஆக்கப்படிருகிறது அந்த வழியில் உலக நாடுகளிடம்இ இவர்களால் தான் எம்மக்களை விடுதலை செய்ய முடியும் அரசியல் தீர்வையும் உருவாக்க முடியும்.

இன்று சர்வதேச மனிதவுரிமைகள் அமைப்பும் சர்வதேச போர் குற்றங்களுக்கான அமைப்புக்களும் விசாரணையை மேற்கொள்ளுமாறு அறிக்கையை விட்டுள்ள அதே நேரத்தில் பெரும் நெருக்கடிகளையும் உயிர் இழப்புக்களையும் தாங்கி உண்மையை உலகிற்கு கொண்டு வந்திருக்கும் இவ்வேளையில் அதற்கு உறுதுணையாய் நிற்காமல்? புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் நாங்கள் இன்னும் எதுநடக்க வேண்டும்? என்று எதிர்பார்க்கின்றோம்? இந்த கொடுங்கோல் ஆட்சியாளர்களை குறைந்த பட்சம் சர்வதேச நீதிக்கூண்டில் விரைவில் ஏற்றுவதற்கு நாம் வாரத்தில் 3மணி நேரம் மட்டும் இறந்து போன இன்னும் சித்திரவதைகளுக்குள் சிக்குண்டு போயுள்ள எமது உறவுகளுக்கு குரல்கொடுக்க வேண்டாமா?

காலம். 30.06.2010 புதன்கிழமை

பி.பகல் 15.00மணி முதல் 18.00 மணிவரை

பிரெஞ்சு பாராளமன்றம் (Assemblée Nationale ) முன்பாக

Metro: Assemblé Nationale ligne 12 , Invalides ligne 8 et 13

தொடர்பு : 06 15 88 42 21

தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

Sunday, June 27, 2010

பிரான்ஸ் வெண்திரையரங்கில் எல்லாளன் திரைப்படம் JULY 2,12

பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த எல்லாளன் திரைப்படம் 2010 யூலை 2ம் நாள் வெள்ளிக் கிழமை மாலை 5.00 மணிக்கும், இரவு 8.00 மணிக்கும் “Espace Cinema” வெண்திரையரங்கில் வெளியாகின்றது.

2007ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 22ம் நாள் அன்று எல்லாளன் நடவடிக்கை மூலம் அநுராதபுர வான்தளம் தாக்கி அழிக்கப்பட்டது. அந்த நடவடிக்கையில் வீரச்சாவடைந்த கரும்புலி வீரர்களின் உண்மைச் சம்பத்தை தழுவிய எல்லாளன் திரைப்படம். தமிழீழத்தின் மிகப் பிரமாண்டமான படைப்பாகும்.

எல்லாளன் திரைப்படத் தயாரிப்பில் ஈடுப்பட்ட வேளையில் லெப். கேணல் தவா அவர்களும், கரும்புலி லெப். கேணல் இளங்கோவாக நடித்த மேஐர் புகழ்மாறனும் வீரச்சாவடைந்துள்ளார்கள்.

இதில் தளபதிகளாக, பயிற்சி ஆசிரியர்களாக நடித்த பிரிகேடியர் சசிக்குமார், கேணல் வசந்தன், கேணல் இளங்கீரன் ஆகியோரும் வீரச்சாவடைந்துள்ளார்கள்.

இத் திரைப்படம் போர் நெருக்கடியான சூழலில் திரைப்படமாக்கப்பட்டது. விடுதலை உணர்வை மீட்டுக் கொண்டிருக்கும் இப்படத்தை புலம்பெயர் வாழ் மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றார்கள்

Espace Cinema

Metro -4 – Chemins - Aubervilliers


தொடர்புகளுக்கு – 0610357719

Thursday, December 03, 2009

பிரான்சில் வட்டுக்கோட்டைத்தீர்மான வாக்கெடுப்பு நடைபெறும் வாக்குச் சாவடிகள்.


பிரான்ஸ்: வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீள்வலியுறுத்தி பிரான்ஸ் தழுவிய வாக்கெடுப்பு. பிரான்சில் வட்டுக்கோட்டைத்தீர்மான வாக்கெடுப்பு நடைபெறும் வாக்குச் சாவடிகள்.


பிரான்சில் வட்டுக்கோட்டைத்தீர்மான வாக்கெடுப்பு நடைபெறும் வாக்குச் சாவடிகள்.
PARIS (75) மக்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடிகள்.

BUREAU DE VOTE DE PARIS (75)

PARIS

MRAP - 43 bd Magenta - 75010 Paris

Tous les arrondissements de Paris

Contact 75 : Shalini 06 13 05 22 34 - 06 34 87 30 78

SEINE-ET-MARNE (77) மக்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடிகள்.;

BUREAU DE VOTE DU SEINE-ET-MARNE (77)

CHELLES

L’Espace Jean Moulin -3 rue Exupéry-77500 Chelles
ANNET-SUR-MARNE, BREU-SUR-CHANTEREINE, CARENTIN, CHELLES, CLAYE-SOUILLY, ,COURTRY, DAMPMART, JABLINES, LAGNY-SUR-MARNES, LESCHES, MEAUX,MITRy-MORY, PIN, POMPONNE, THORIGNY-SUR-MARNE, VAIRES-SUR-MARNE, VILLEPARISIS, VILLEVAUDE, …

Contact : Chandran 06 23 72 31 83

CHAMPS SUR MARNE (Samedi 12 déc. 14h-21h/ Dimanche 13 déc. 9h à 15h)

Ancien Présbytère- Rue de la Mairie-77420 Champs sur Marne

BAILLY-ROMAINVILLIERS, BUSSY-SAINT-GEORGES, BUSSY-SAINT-MARTIN, CHALIBERT, CHAMPS-SUR-MARNE, CHANTELOUP-EN-BRIE, CHESSY, COLLEGIEN, COULOMMIERS, COUPVRAY, CROISSY-BEAUBOURG, DESCARTES, EMERAINVILLE, FERRIERES-EN-BRIE, GOUVERNES, GRETZ,GUERMANTES, JOISSIGNY, LOGNES, MAGNY-LE HONGRE, MONTEVRAIN, NOISIEL, OZOIR-LA-FERRIER, PONTAULT-COMBAULT, PONTCARRE, RENTILLY, ROISSY-EN-BRIE, SAINT-THIBAULT-LES-VIGNES, SERRIS, TORCY, TOURNAN EN BRIE , BUSSY SAINT GEORGES, …

Contact : Ganesh 06 48 15 89 01

SAVIGNY-LE-TEMPLE

25 Avenue Missak Manouchian 77176 Savigny Le Temple

BRIE COMTE ROBERT, FONTAINEBLEAU, LESIGNY, LIEUSAINT, MELUN, MOISSY-CREMIERE, NEMOURS, SAVIGNY-LE-TEMPLE, TOURNAN EN BRIE, …

Essonne ( 91) : BOUSSY SAINT ANTOINE

Contact: Kajen 06 29 93 74 55/Ragu 06 19 58 43 89

Contact 77 : Ragu 06 19 58 43 89/ Akalya 06 12 57 10 95

LES YVELINES (78) மக்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடிகள்.;

BUREAU DE VOTE DES YVELINES (78)

MANTES LA JOLIE

69 rue gassicourt - 78200 Mantes la jolie

MAUREPAS

Hôtel de ville – 2 place d’Auxois_ 78310 Maurepas


Contact: Bosco 06 36 15 36 07 / Rubakaran 06 07 11 21 37

L’ESSONNE (91) மக்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடிகள்.;;

BUREAU DE VOTE DE L’ESSONNE (91)

SAVIGNY-SUR-ORGE

13 Allée André Derain - 91600 Savigny-sur-orge

MASSY

Maison d’association - 33 rue de Toulouse Lautrec -91 000 Massy
Contact : Gowtham 06 27 60 25 48/ Balan 06 59 00 81 78


HAUTS-DE-SEINE (92) மக்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடிகள்.;

BUREAU DE VOTE DE HAUTS-DE-SEINE (92)

CLICHY

Ecole maternelle Victor Hugo, 19 rue d’alsace, 92100 Clichy

ASNIERES SUR SEINE, CLICHY, GENNEVILLIERS, LEVALLOIS PERRET, VILLENEUVE LA GARENNE, NEUILLY SUR SEINE, …

NANTERRE

Maison de Quartier- 2 allée du Colonel Fabien 92000 Nanterre

COURBEVOIE, GARCHES, MARNES LA COQUETTE, NANTERRE, PARIS LA DEFENSE, PUTEAUX, RUEIL MALMAISON, ST CLOUD, SURESNES, VAUCRESSON, COURBEVOIE, COLOMBES, LA GARENNE COLOMBES, PUTEAUX, BEZON (95), …

Contact: Shalini 06 13 05 22 34 - 06 34 87 30 78/ Sachi 06 76 13 44 39

SEINE-SAINT-DENIS (93) மக்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடிகள்.;

BUREAU DE VOTE DE LA SEINE-SAINT-DENIS (93)

உங்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும் வாக்குகளைப் பதிவுசெய்யவும்.;

BOBIGNY

Impasse Henri Lampernesse 93000 BOBIGNY

BOBIGNY, BONDY, NOISY-LE-SEC, PANTIN
BAGNOLET

Salle des Coutures -37 rue Jules Ferry 93170 BAGNOLET

BAGNOLET, LE PRE SAINT-GERVAIS, LES LILAS, MONTREUIL, ROMAINVILLE,

ROSNY-SOUS-BOIS


CLICHY-SOUS-BOIS

Salle de l'orangerie Place de l’orangerie -Clichy-sous-Bois

CLICHY-SOUS-BOIS, COUBRON, LE RAINCY, LES PAVILLONS-SOUS-BOIS, MONTFERMEIL

LA COURNEUVE ( à côté de l’Hôtel de Ville)

Bourse du travail-26 rue gabriel péri -93120

La Courneuve

AUBERVILLIERS, BLANC-MESNIL, DRANCY, DUGNY, LA COURNEUVE,

LE BOURGET

L’ILE-SAINT-DENIS

Espace Jeunes - 31 Bis Rue Du Bocage - 93450

L’Ile St Denis

EPINAY, VILLETANEUSE, VILLENEUVE-LA-GARENNE (92)

NEUILLY-SUR-MARNE

Le Martin Pêcheur- Chemin de l’écluse

Neuilly-sur-seine

GAGNY, GOURMAY-SUR-MARNE, NEUILLY-PLAISANCE, NEUILLY-SUR-MARNE, NOISY-LE-GRAND, VILLEMOMBLE

SAINT-DENIS

Bourse de travail - 9/11 rue Génin - Saint-denis

LA PLAINE-SAINT-DENIS, SAINT-DENIS, PIERREFITTE, SAINT-OUEN, STAINS

SEVRAN (devant la mairie)

Restaurant communal, rue roger le manner, Sevran

AULNAY-SOUS-BOIS, LIVRY-GARGAN, TREMBLAY-EN-FRANCE, VAUJOURS, VILLEPINTE, VILLEPARISIS (77)

VAL-DE-MARNE (94) மக்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடிகள;.

BUREAU DE VOTE DE VAL-DE-MARNE (94)

VILLENEUVE-SAINT-GEORGES

Paroisse Saint-Georges, 9 rue de la Bretonnerie, 94190 VILLENEUVE SAINT GEORGES

ALFORTVILLE, MAISONS-ALFORT, SAINT-MAUR-DES-FOSSES, VILLEUNE-SAINT-GEORGES, VILLEN, …

CRETEIL

Maison de la solidarité, 1 rue Albert Doyen, 94000 CRETEIL

CHARENTON-LE-PONT, CRETEIL, CHAMPIGNY, CHOISY LE ROI,NOGENT-SUR-MARNE, …

IVRY-SUR-SEINE

25 rue jean rousseau- 94200 Ivry-sur-seine

ABLON-SUR-SEINE, CHOISY-LE-ROI, IVRY-SUR-SEINE, VITRY-SUR-SEINE,

VILLENEUVE-LE-ROI, ARCUEIL, …
Contact: Nada 06 12 68 57 59/Abiramy 06 11 30 07 20

VAL D’OISE (95) – OISE (60) மக்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடிகள்.;;

BUREAU DE VOTE DU VAL D’OISE (95) ET DE L’OISE (60)

உங்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும் வாக்குகளைப் பதிவுசெய்யவும்.;

ARGENTEUIL

2 rue Paul Vaillant Couturier – 95100 ARGENTEUIL
ANDILLY, ARGENTEUIL, BEAUCHAMP, BESSANCOURT, BETHEMONT-LA-FORET, BEZONS, CHAUVRY, CORMEILLES-EN-PARISIS, DEUIL-LA-BARRE, EAUBONNE, ENGHIEN-LES-BAINS, ERMONT, FRANCONVILLE, FREPILLON, FRETTE-SUR-SEINE, HERBLAY, MARGENCY, MONTIGNY-LES-CORMEILLES, MONTLIGNON, MONTMAGNY, PLESSIS-BOUCHARD, SAINT-GRATIEN, SAINT-LEU-LA-FORET, SAINT-PRIX, SANNOIS, SOISY-SOUS-MONTMORENCY, TAVERNY

Contact : 06 24 33 65 08

CERGY

Ecole Primaire Perche/ Chat Perché – 2 avenue de la Constellation – 95800 CERGY



ABLEIGES, AINCOURT, AMBLEVILLE, AMENUCOURT, ARRONVILLE, ARTHIES, AUVERS-SUR-OISE, AVERNES, BANTHELU, BELLAY-EN-VEXIN, BERVILLE, BOISEMONT, BOISSY-L'AILLERIE, BRAY-ET-LU, BREANCON, BRIGNANCOURT, BUNY, BUTRY-SUR-OISE, CERGY, CERGY HAZAY, CHAPELLE-EN-VEXIN, CHARMONT, CHARS, CHAUSSY, CHERENCE, CLERY-EN-VEXIN, COMMENY, CONDECOURT, CORMEILLES-EN-VEXIN, COURCELLES-SUR-VOISNE, COURDIMANCHE, ENNERY, EPIAIS-RHUS, ERAGNY, FREMAINVILLE, FREMECOURT, FROUVILLE, GADANCOURT, GENAINVILLE, GENICOURT, GOUZANGREZ, GRISY-LES-PLATRES, GUIRY-EN-VEXIN, HARAVILLIERS, HAUTE-ISLE, HEAULME, HEDOUVILLE, HEROUVILLE, HODENT, JOUY LE MOUTIER, LABBEVILLE, LIVILLIERS, LONGUESSE, MAGNY-EN-VEXIN, MARINES, MAUDETOUR-EN-VEXIN, MENOUVILLE, MENUCOURT, MENY-SUR-OISE, MERY, MONTGEROULT, MONTREUIL-SUR-EPTE, MOUSSY, NESLES-LA-VALLEE, NEUILLY-EN-VEXIN, NEUVILLE SUR OISE, NUCOURT, OMERVILLE, OSNY, PERCHAY, PIERRELAYE, PONTOISE, PUISEUX-PONTOISE, ROCHE-GUYON, SAGY, SAINT OUEN L'AUMONE, SAINT-CYR-EN-ARTHIES, SAINT-GERVAIS, SANTEUIL, SERAINCOURT, THEMERICOURT, THEUVILLE, US, VALLANGOUJARD, VALMONDOIS, VAUREAL, VENTHEUIL, VIENNES-EN-ARTHIES, VIGNY, VILLIERS-EN-ARTHIES, WY-DIT-JOLI-VILLAGE

OISE (60) : BEAUVAIS, …

YVELINES (78) : CONFLANS SAINT HONORE, CHANTELOUP LES VIGNES,…

Contact : 06 03 24 73 33 (Ravi) – 06 46 42 80 13 (Ratha)



LOUVRES

3 bis Place Jean-Baptiste Corot - 95 380 LOUVRES




ASNIERES-SUR-OISE, BELLEFONTAINE, CHATENAY-EN-FRANCE, CHAUMONTEL, CHENNEVIERES-LES-LOUVRES, EPIAIS-LES-LOUVRES, FONTENAY-EN-PARISIS, FOSSES, GOUSSAINVILLE, JAGNY-SOUS-BOIS, LASSY, LOUVRES, LUZARCHES, MAREIL-EN-FRANCE, MARLY-LA-VILLE, MESNIL-AUBRY, NOISY-SUR-OISE, PLESSIS-GASSOT, PLESSIS-LUZARCHES, PUISEUX-EN-FRANCE, SAINT-WITZ, SEUGY, SURVILLIERS, VEMARS, VIARMES, VILLERON, VILLIERS-LE-SEC,

OISE (60) : CREIL, CHANTILLY, SENLIS, COMPIEGNE, ….

Contact : 06 03 30 40 21 – 06 12 75 60 98



SARCELLES

10 Avenue Paul Valéry – 95 200 SARCELLES


ARNOUVILLE-LES-GONESSE, ATTAINVILLE, BAILLET-EN-FRANCE, BEAUMONT-SUR-OISE, BELLOY-EN-FRANCE, BERNES-SUR-OISE, BONNEUIL-EN-FRANCE, BOUFFEMONT, BRUYERE-SUR-OISE, CHAMBLY, CHAMPAGNE-SUR-OISE, DOMONT, ECOUEN, EPINAY-CHAMPLATREUX, EZANVILLE, GARGES-LES-GONESSE, GONESSE, GROSLAY, ISLE-ADAM, MAFFLIERS, MOISSELLES, MONTMORENCY, MONTSOULT, MOURS, NERVILLE-LA-FORET, NOINTEL, PARMAIN, PERSAN,PISCOP, POUQUEVAL, PRESLES, RONQUEROLLES, SAINT-BRICE-SOUS-FORE, SAINT-MARTIN-DU-TERTRE, SARCELLES, THILLAY, VAUDHERLAND, VILLAINES-SOUS-BOIS, VILLIERS-ADAM, VILLIERS-LE-BEL,

SEINE-SAINT-DENIS (93) : STAINS, PIERRFITTE

Contact : 06 64 81 98 23

Contact 95 : Christa 06 25 52 79 55

அன்பான பிரான்ஸ் (பாரீஸ்) வாழ் தமிழீழ மக்களே மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாக்கு நிலையங்களுக்கு சென்று உங்கள் வாக்குப்பதிவுகளை மேற்கொள்ளுங்கள்.

பிற மாநிலங்களுக்கான வாக்குச் சாவடிகள் பின்னர் அறியத்தரப்படும்.

உங்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும் வாக்குகளைப் பதிவுசெய்யவும்.

Tuesday, December 01, 2009

பிரான்சு தழுவிய வாக்கெடுப்பு டிசெம்பர் 12 ம் 13 ம் நாள்களில் வாக்களிக்க தயாராகுவோம்


சிங்களத்தின் சிறைக்கூண்டில் எங்களது சொந்தங்கள், பொங்கு தமிழினத்தவர் நாம் இங்கிருந்து என்ன செய்வோம்? தமிழ்ஈழம் தான் எமது தீர்வு என்று 77ல் தீர்மானித்தோம், சிங்களத்துக்கும் சர்வதேசத்துக்கும் இடித்துரைத்து வெளிகொணர்ந்துள்ளோம்.

நமது சொந்த மண்ணிலேயே 3 இலட்சம் தமிழ் மக்கள் சிறைப்படிக்கப்பட்டுள்ள நிலையும் சிங்கள பௌத்த பயங்கரவாத அரசினதும் இன அழிப்புச் செயற்பாடுகளையும், சர்வதேசம் கண்டு எமக்காக கண்திறந்து செயற்படும் வேளையில் நாம் கண்மூடிக்கிடக்க முடியாது.

சர்வதேசம் எமக்காகச் சிங்களத்தைத் தட்டிக்கேட்க எமது தமிழ்ஈழம் என்ற முடிந்த முடிவை மீண்டும் துரும்புச்சீட்டாக்கி அதை அடையும் வரை வீதிகள்தான் எம் வீடு விடியும் வரை போராடு என்ற தாரக மந்திரத்தை மனதிற் கொண்டு

மார்கழி 12,13 திகதிகளில் பிரான்சில் நடைபெறவிருக்கும் தமிழ்ஈழம் தான் இறுதித்தீர்வு என்ற எமது ஏகோபித்த விருப்பை தெரிவிக்கும் கருத்துக்கணிப்புக்கான தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழீழ உணர்வாளர்களின் உதவியை நாடிநிற்கின்றோம்.

வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீள்வலியுறுத்தி தமிழரின் தாகத்தை .......

தரணிக்கு கூறிடுவோம் ...

தொடர்புகளுக்கு:

திரு 0615884221

தமிழீழமக்கள் பேரவை பிரான்ஸ்

Sunday, November 01, 2009

பிரான்சில் பிரிகேடியர் தமிச் செல்வன் அவர்களின் வணக்க நிகழ்வு.

தமிழீழ விடுதலைப்பலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சுப. தமிழ்செல்வன் அவர்களை சிறிலங்கா அரசு குண்டு வீசி அழித்து இரண்டுவருடங்கள் ஆகின்றன.

அல்லல் படும் தமிழ் மக்களினுடைய துன்ப துயரங்களை அவனியெல்லாம், புன்னகையுடனேயே எடுத்துரைத்ததுடன் புத்த அரசின் புழுகுகளை உலகெங்கும் வெளிக் கொண்டு வந்தீர்கள். இன்று தமிழினம் பேச்சிழந்து நிற்கிறது. ஈழம் மலர ஒற்றைக்காலில் தவம் செய்த ஞானியே உங்களை என்றும் மறவோம்.

பிரான்சில் எதிர்வரும் 07.11.2009அன்று, சனிக்கிழமை, Trocadero என்னும் இடத்தில் பி.பகல் 15.30க்கு தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.

அனைத்து பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைத்துள்ளனர் ஏற்பாட்டாளர்கள்.

Monday, October 26, 2009

பிரான்சில் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தீர்மானத் தேர்தல்

புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் தாயகம் நோக்கி இன்றைய நிலைப்பாட்டை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பதையும் அதனுடைய ஒரு களமாகவே எதிர்வரும் 12, 13 திகதிகளில் தமிழர் அமைப்புக்களால் புலம்பெயர்ந்த நாடுகளில் நடாத்தப்படவிருக்கும் வட்டுக்கோட்டை தேர்தல் அமையப்போகின்றது. இது தொடர்பில் பிரான்சு தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

அன்பான தமிழீழ மக்களே!

ஈழத்தமிழினம் தான் இழந்ந உரிமையை மீண்டும் பெற்றிட பல அறவழிப் போராட்டங்களை நடாத்திய போது அப்போராட்டங்கள் யாவும் ஆளும் கட்சிகளால் ஆயுதம் கொண்டு அடக்கப்பட்டதும் பல உயிர்கள் எடுக்கப்படுவதும் வழமையான வாழ்வாகி தமிழர்களுக்கு போனதால் தமிழீழத் தந்தை அமரர் எஸ்.ஜே. வி.செல்வாநாயகம் அவர்கள் 1976ல் தமிழீழ மக்கள் சுதந்திரமும், சந்தேசமாகவும் வாழவேண்டுமாயின் அது நாங்கள் இழந்து போன இறைமைகொண்ட சுதந்திர தமிழீழத்தை மீண்டும் பெற்றெடுப்பதே என்று அறுதியும் இறுதியுமாக எடுத்துரைத்தது மட்டுமல்லாது அதனை ஆதரித்து அதற்காக அங்கீகாரத்தை 1977 ல் வட்டுக்கோட்டை என்னும் பிரதேசத்தில் ஐனநாயகத் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் நிரூபித்து காட்டியிருந்தனர்.

அதனை ஏற்றுக் கொள்ளாத சிங்கள இனவாத அரசுகள் தமிழ் மக்களின் அபிலாசைகளை புறம் தள்ளி திட்டமிட்ட இனக்கலவரங்களை உருவாக்கி, தமிழ் மக்கள் தொடர்ந்து உயிர், உடமை, நிலம் பறிப்பு, கைதுகள், படுகொலைகள், காணாமல் போதல் போன்ற தமிழருக்கெதிரான நடவடிக்கையில் இறங்கியதால் தமிழ் மக்கள் தமது உயிர் வாழ்விற்காக ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பதே உண்மையானதாகும். இந்த போராட்டம் பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளின், மக்களின் உயிர் அர்ப்பணிப்பினால் தமிழீழ மக்களுக்கு உலகில் ஒரு உயர்வான நிலைக்கு இட்டுச்சென்றதோடு நீறு பூத்த நெருப்பாக இருந்து கொண்டிருக்கும் எமது உரிமை போராட்டம் உலகத்தின் இன்றைய விருப்பான சமாதான அரசியல் மூலம் குறிக்கோளை அடையலாம் என்பதால் அந்த அற்புதமான தியாகப் போராட்டம் மௌனித்து நிற்கின்றது என்பதே உண்மை.

அதே நேரத்தில் எமது மக்களின் இன்றைய அபிலாசைகளையும், 1977ல் தமிழ் மக்கள் கொடுத்த அங்கீகாரத்தையும் 32 வருடங்களின் பின் ஈழத் தமிழ் மக்களின் நிலைப்பாட்டை நாடி பிடித்து பார்க்கும் செயலில் சர்வதேசம் நாட்டம் கொண்டுள்ளதையும் புரிந்து கொள்வோம். அன்பார்ந்த தமிழீழ மக்களே! சர்வதேசம் இன்று ஈழத்தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்பை விரும்பியோ அன்றில் விரும்பாமலோ ஒரு தீர்வை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றது. அதற்கு காரணம் இனவெறி பிடித்த சிங்கள அரசுகள் தமிழ் மக்களுக்கு 60 வருடங்களுக்கு மேலாக கொடுமைகள் இழைத்த போதும், அவர்களின் வாழ்விடங்கள் திட்டமிட்ட ரீதியில் பறிக்கப்பட்டபோதும், உள்நாட்டுப் பிரச்சனை எனக் கூறிக்கொண்டு தமிழ் மக்கள் கைதுகளும், காணாமல் போதல், படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட போதும், தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் படிப்படியாக உச்சமடைந்து மக்கள் போராட்டமாக பரிணமித்து சிங்கள தேசத்திற்கு சரிநிகராக தமிழ் மக்கள் உயர்வடைந்து நின்ற போதும், அதனை அடக்குவதற்கு இந்திய அரசு அமைதிப்படை என்ற பெயரில் எமது மண்ணையும், மக்களையும் தாங்கொணா துன்பப்படுத்திய போதும் எமது இனப்பிரச்சனையின் தீர்வுக்கு மூன்றாம் தரப்பாக உலக நாடுகள் உதவிட வேண்டும் என்ற எங்கள் தேசிய ஆன்மா கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்திய போதும்,

சர்வதேசம் வரை கொண்டு செல்லப்பட்ட தமிழ் மக்களின் நியாயமான போராட்டம் இலங்கை அரசினால் புறம்தள்ளப்பட்டு மீண்டும் போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பதை தெரிந்து கொண்ட போதும், உலகம் முழுவதும் ஓடிச்சென்று வகை தொகையின்றி ஆயுதங்களை கொள்வனவு செய்த போதும், உலகத்திற்கு பயங்கரமான நாடுகள் என்ற நாடுகளுடன் நட்பையும் இராணுவ உதவிகளையும் பெற்றுக்கொண்ட போதும், தடைசெய்யப்பட்ட குண்டுகளை வாங்கி குவித்த போதும்,பயங்கரவாதத்துக்கெதிரான போர் எனக்கூறிக்கொண்டு எமது மக்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனஅழிப்பை தொடங்கி சொல்ல முடியாத துன்பங்களை எம்மக்களுக்கு ஏற்படுத்திய போதும், கொத்துக் கொத்தாக எம்மவர்கள் கொன்று குவிக்கப்பட்ட போதும், இன்று முகாம் என்ற பெயரில் முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டு பழிவாங்கல் செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு தினம் தினம் கொன்றொழித்து வருவதை ஆதார பூர்வமாக சர்வதேச ஊடகங்கள் தெரியப்படுத்த போதும் வேடிக்கை பார்த்த,

பார்த்து வரும் சர்வதேசம் தனது மனசாட்சிக்கு விடைகாணும் ஒரு முயற்சியாக புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் தாயகம் நோக்கி இன்றைய நிலைப்பாட்டை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பதையும் நாம் புரிந்து கொள்வோம். அதனுடைய ஒரு களமாகவே எதிர்வரும் 12, 13 திகதிகளில் தமிழர் அமைப்புக்களால் புலம்பெயர்ந்த நாடுகளில் நடாத்தப்படவிருக்கும் வட்டுக்கோட்டை தேர்தல் அமையப் போகின்றது. அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! நாம் இழந்தவைகள் கொஞ்சம் நஞ்சமல்ல! அதை உங்களுக்கு மீண்டும் தெரியப்படுத்தும் காலமும் இதுவல்ல! நீங்கள் ஒன்றும் தேசப்பற்று இல்லாத தமிழரும் அல்ல! இத்தேர்தலில் நாம் அளிக்கப்போகும் வாக்குகள் எமது தமிழ் மக்களின் தலைவிதியை கூட தீர்மானிக்கப்போகும் ஒரு பெரும் சக்தியாகக்கூட இருக்கலாம்! பற்பல அற்புதமான தியாகங்களை புரிந்தவொரு இனத்தில் இருந்து தோன்றியவர்கள் நாம்.

இன்று ஒரு மணி நேரம் செய்யப்போகும் ஒரு தியாகம் எம்மை மண்ணுக்காக, எம்மை நம்பி மானம் காத்து மண்ணில் சாய்ந்த மாவீரர்களுக்காகவும், முட்கம்பி வேலிகளுக்கு துன்பமே வாழ்வாகி வாழும் எம்மக்களுக்காகவும், எதிர்கால வாழ்வே இனி என்ன என்று தெரியாமல் இருக்கும் எங்கள் மண்ணின் விலைபேச முடியாத வீர, வீராங்கனைகளின் வாழ்வில் எதிர்பார்த்த கனவை நனவாக்கும் என நம்புவோம், புறப்படுவோம்!, செயற்படுவோம்! வாக்களிப்போம்! மற்றவர்களையும் உரிமையுடன் வாக்களிக்க வைப்போம்! காலம்: டிசெம்பர் 12, 13, சனி, ஞாயிறு காலை 10.00 மணிமுதல் பிற்பகல் 16.00 மணிவரை இத்தேர்தலில் வாக்களிக்கும் தகுதி கொண்டவர் 18 வயதிற்கு மேற்பட்ட தமிழீழத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். இந்நபர் தான் வசிக்கும் (Residence) இடத்தில் உள்ள அல்லது அதற்கு அருகில் உள்ள இடத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.

மேலதிக விபரங்களுக்கும், தொடர்புகளுக்கு

mail: mte.france@gmail.com

தொலை பேசி இல : 06 15 88 42 21

டிசெம்பர் 12,13, 2009 தேர்தல்

ஏற்பாட்டுக்குழு

தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

Wednesday, September 23, 2009

பிரான்சில் தியாக தீபம் திலீபனின் 22ம் ஆண்டு நினைவுநாள்

தமிழின விடுதலைக்காக தன்னை ஆகுதியாக்கிய பெருவீரன் திலீபன். தியாகத்தின் உச்சத்தைத்தொட்டு ஈழத்தமிழனின் ஓர்மத்தையும், விடுதலைப்பற்றையும், அரசியல் அவாவையும் உலகிற்க்குச்சொன்னவர்.

நல்லூர் வீதியில் பன்னிரு நாட்கள் பசிகிடந்து ஆகுதியாகிய லெப்.கேணல் திலீபன் அவர்களின் 22வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரான்சில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே பிரான்சில் தியாக தீபம் திலீபனின் நினைவாக குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு தமிழ் இளையோரால் முன்னெடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் சனிக்கிழமை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் நினைவு வணக்க நிகழ்வானது நடைபெறவுள்ளது.

காலம்: 26.09.2009 சனிக்கிழமை

நேரம்: 15.00மணி

இடம்: அன்வர்ஸ்(Anvers -வைற் சேர்ச்)

Métro 2: ANVERS


Tuesday, September 15, 2009

தியாகதீபம் திலீபன் அவர்களின் 22ம் ஆண்டு நினைவாகக் குருதிக்கொடை

தனது இனத்திற்கா ஆகுதியாகிய தியாகதீபம் திலீபன் அவர்களின் 22ம் ஆண்டு நினைவாகவும், வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதிகேட்டும்

பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வானது

19.09.2009 சனிக்கிழமை காலை 09.00மணிக்கு நடைபெறவுள்ளது.

குருதிக்கொடை செய்ய விரும்புபவர்கள் 06.13.13.15.43 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.





Blog Archive