எமது பதிப்புக்கள்
Friday, September 24, 2010
Friday, September 17, 2010
எழுவாய் தமிழா நெருப்பாய் பெல்யியம் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன்
at
11:20 AM
Posted by
எல்லாளன்

தாயகத்தையும் தாயாக மக்களையும் நேசிக்கும் மனித நேயர்கள் மூவரிநால். ஜெனிவா ஐநா முருகதாசன் திடலில் இருந்து பெல்யியம் ஐரோப்பிய பாராளுமன்றம் நோக்கி.
ஆரம்பிக்கப்பட்ட மனித நேய நடைபயணம் ஐரோப்பிய பாராளுமன்றத்தை வந்தடையும் நாளன்று. 27 .09 .2010 .திங்கள் நண்பகல் 2 மணிக்கு அவர்களின் கோரிக்கைகளுக்கு வலுச் சேர்ப்பதற்காக எழுச்சி பொங்க அணிதிரண்டு வருமாறு தாயகத்தையும் தாயாக மக்களையும் நேசிக்கும் புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் அனைத்து தமிழ் உறவுகளையும் அன்போடு இரு இருகரம் கூப்பி உங்கள் வாசலில் வந்து உரிமையோடு அழைக்கிறோம். தாய் தமிழகத்தில் இருந்தும் தமிழீழத்தில் இருந்தும் தாயகத்தையும் தாயாக மக்களையும் நேசிக்கும் உணர்வாளர்கள் பலரும் கலந்துகொள்கிறார்கள்.
ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன்
*மக்கள் புரட்ச்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்*
தமிழீழ மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காக தமிழீழ தனியரசை அமைப்பதற்காக!
*முப்பத்து ஐந்து ஆயிரம் வீரர்கள் மரணித்துக் கேட்டார்கள்*
*ஆயிரம் வீரர்கள் கந்தக வெடியாக வெடித்துக் கேட்டார்கள்*
*இரண்டு தியாகிகள் உண்ணாமல் இறந்து கேட்டார்கள்*
*பல தியாகிகள் தீயிலே எரிந்து கேட்டார்கள்*
*பல உணர்வாளர்கள் உண்ணாமல் இருந்து கேட்டார்கள்*
*பல உணர்வாளர்கள் இப்போது நடந்து கேட்கிறார்கள்*
*நாங்கள் என்ன செய்யப் போகிறோம் சிந்திப்போம் செயற்படுவோம் எதையும் சந்திப்போம்*
!தமிழரசன்.தி.ஈழம்5 .கொம்!நன்றி
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
Monday, September 13, 2010
ஐ.நா சபைக்கு வரும் மகிந்த ராஜபக்ச மீது போர்க்குற்ற விசாரணை நடத்து - கனடியத்தமிழர்கள் அறைகூவல்
at
9:52 PM
Posted by
எல்லாளன்
அவ்வாறு அவர் வருகை தருவாரானால் இலங்கைத்தீவில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக அவரை விசாரணை செய்ய வேண்டுமென்று கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
“இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மனிதப் பேரவலத்தை சிறிலங்கா அரசு வன்னியில் நடத்தியது. பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் ஈவிரக்கமின்றிக் படுகொலைசெய்யப்பட்டனர். இவற்றை மூடி மறைத்து சுயாதீன சர்வதேச நீதி விசாரணைகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை மகிந்த அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளது” என்று சுட்டிக்காட்டியுள்ள கனடியத் தமிழர் தேசிய அவை, ஐ.நாவையும் அதன் விசாரணை முன்னெடுப்புக்களையும் அவமதிக்கும் மகிந்த ராஜபக்சவை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள அனுமதிப்பதே மிகப் பெரும் தவறு என்றும் கூட்டுக்காட்டியுள்ளது.
‘சனல் 4’ காணொளிகள் சித்திரவதைகளையும் படுகொலையையும் நிரூபிக்கின்றன. டப்ளின் மக்கள் ஆணையம் போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் ஜீ.எஸ்.பி. வரிச் சலுகையை நிறுத்தியுள்ளது. ஐ.நா. சபையின் செயலாளர் போர்க்குற்ற விசாரணைக்கென நிபுணர்கள் குழுவை நியமித்துள்ளார்.
இந்நிலையில் சிறீலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச மீதான போர்க்குற்ற விசாரணையை தாமதமின்றி ஆரம்பிக்க வேண்டுமென அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐ.நா சபைக்கூட்டத் தொடரில் அவர் கலந்து கொண்டால் அவருடனான அனைத்து ராஐதந்திர தொடர்புகளையும் அங்கு தவிர்க்குமாறு கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தையும் கனடியத்தமிழர் தேசிய அவை கனடியத் தமிழ் மக்கள் மற்றும் மனித உரிமைகள் ஆவர்வளர்கள் அனைவர் சார்பிலும் வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளது.
இவ்விடயங்களை வலியுறுத்தும் வகையிலும், அமெரிக்க அரசை இவ்விடயத்தில் முதன்மை பங்கை வகிக்குமாறு வலியுறுத்தியும் கனடியத் தமிழர் தேசிய அவை செப்டெம்பர் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 3:00 மணிக்கு ரொறன்ரோவில் (360 University Ave) அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் முன்னாலும், மொன்றியலில் (1155 rue St-Alexandré - Corner Of St-Alexandré & Rene Levesque ) அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் முன்னலும் கவனயீர்ப்பு நிகழ்வை நடாத்தவுள்ளது.
இதில் பெருமளவில் கலந்துகொள்ளுமாறு கனடா வாழ் தமிழ் மக்கள் அனைவரும் உரிமையுடன் அழைக்கப்படுகின்றனர்.
மேலதிக தொடர்புகளுக்கு
தொலைபேசி இல: 1866 263 8622 Ext 101
மின்னஞ்சல் முகவரி: info@ncctcanada.ca
Thursday, September 09, 2010
பேரறிவாளனின் “தூக்குக்கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்” – 5 ஆம் பதிப்பு வெளியீடு
at
8:10 PM
Posted by
எல்லாளன்
Sunday, September 05, 2010
Thursday, August 19, 2010
ஐ. நா நோக்கி நகரும் கால்களுக்கு வலுச் சேர்ப்போம்
at
11:18 AM
Posted by
எல்லாளன்

சிவந்தனை வரவேற்கத் தயாராகும் சுவிஸ் மக்கள், ஜெனீவா நோக்கி அணிதிரளும் ஐரோப்பிய மக்கள்
தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கி இன்று 27வது நாளாக சிவந்தன் மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.
மலைப்பாங்கான பிரதேசங்களில் சிவந்தன் நடந்து செல்வதால், நேற்று சுவிற்சர்லாந்து எல்லைக்குள் சென்ற போதிலும், மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்குள் சென்று ஜெனீவா நோக்கி பிரான்ஸ் நாட்டிற்குள் நடந்து செல்லுகின்றார்.
நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10:00 மணியளவில் மீண்டும் சுவிஸ் எல்லைக்குள் பேர்லி (Perly) என்ற இடத்தில் சிவந்தன் நுழையும்போது, அவருக்கு பாரம்பரிய இசைமுழங்க, நாட்டியங்களுடன் செங்கம்பள வரவேற்பு அளிக்க சுவிஸ் தமிழ் அமைப்புக்களும், தமிழ் சமூகமும் ஏற்பாடு செய்துள்ளன.
950 இற்கும் மேற்பட்ட கிலோமீற்றர்கள் நடந்து சென்றுள்ள சிவந்தன் ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 30 கிலோமீற்றர்கள்வரை மட்டுமே நடக்க வேண்டியுள்ளது.
சிவந்தனுடன் சுவிற்சர்லாந்தில் இருந்து சென்றவர்கள் உட்பட 15 பேர் இணைந்து நடந்து செல்லுகின்றனர்.
இவர்கள் நடந்து செல்லும் வழிகளில் தமிழ் மக்களின் நிலை மற்றும் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கல் செய்யப்பட்டு, பிரெஞ்சு மற்றும் டொச் மக்களிற்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, சிவந்தனது கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து சுவிற்சர்லாந்து சூரிச்சில் இருந்து ஜெனீவா நோக்கிய 300 கிலோமீற்றர் தூர மனிதநேய நடை பயணத்தை தமிழின உணர்வாளர்கள் மூவரும் இன்று ஐந்தாவது நாளாக தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஈகப்பேரொளி முருகதாசன் திடலிலான ஐ.நா முன்றலில் இறுதிநாள் கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால், அதில் கலந்துகொள்ள ஐரோப்பிய தமிழர்கள் அணிதிரண்டு வருகின்றனர்.
- சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,
- தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,
- மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு மனிதநேய நடை பயணத்தை சிவந்தன் மேற்கொண்டு வருகின்றார்.
Tuesday, August 17, 2010
கனடிய அகதிகளைக் ஏற்க வாக்களியுங்கள் !!
at
9:39 AM
Posted by
எல்லாளன்
Yes
No
Undecided
It doesn't make a difference to me
See Results
Please go to this website and vote yes
http://www.cp24.com/
Together 4 Tamils
Please go to this website and vote yes. It is about the 500 TAMILS who arrived in Canada. The poll is very important. Please vote yes and save these peoples lives
The Globe and Mail: Sri Lanka seeks deal to share intelligence on migrants Toronto Star: Ottawa balks at public detention hearings for Tamils CBC: Tamil migrants: 'We are not terrorists' CTV News: 'Have faith in us,' Tamil migrants write Toronto Sun: Cops using Interpol to identify Tamil migrants National Post: Tamil migrants say they are fleeing mass murders AFP: Authorities probe funding for Tamil refugees' travel Canadian Press: One Tamil migrant died at sea: RCMP Rabble :Canada's treatment of the Tamil refugees is a defining moment The Montreal Gazette: RCMP confirm man died on migrant boat Times Colonist: Tamil migrants claim they were fleeing mass murders in Sri Lanka Montreal Gazette: Hearings start Monday for asylum-seekers Al Jazeera: Canada probes Tamil smuggling claim London Free Press: Waiting and hoping News 1130: Migrants deny any links with terrorists Medicine Hat News: Mounties still probing last year's Tamil ship as new arrivals hit shore Toronto Star:Tamil asylum-seekers spark Canadian vitriol, anger AFP: Tamil on ship bound for Canada died at sea: Tamil Congress The Star: RCMP confirm death of Tamil man aboard migrant ship |
Saturday, August 14, 2010
அவசர அறிவித்தல் - கனேடியத் தமிழர் பேரவை
at
3:36 PM
Posted by
எல்லாளன்
இலங்கையிலிருந்து அகதிகளாக கப்பல் மூலமாக பயணித்த எமது உறவுகள் இன்று காலை விக்டோரியா துறைமுகத்தினை சென்றடைந்துள்ளனர். அவர்களுக்கான மனிதாபிமானப் பணிகளை, கனேடிய தமிழர் பேரவையின் உறுப்பினர்களும், தொண்டர்களும் வன்குவரில் நிலைகொண்டு முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் தாயக உறவுகளுக்கான தேவைகள் அதிகம் இருப்பதனால், மனிதாபிமான ரீதியில் உதவுவதற்கு கனேடிய உறவுகளின் ஒத்துழைப்பினை கனேடியத் தமிழர் பேரவை எதிர்பார்த்து நிற்கின்றது. குறிப்பாக வன்குவரில் வாழும் எமது உறவுகளின் ஆதரவு உடனடித் தேவையாக உள்ளது.
மேலதிக விபரங்களுக்கு
[ 416] 240 -0078
உடன் தொடர்பு கொள்ளவும்.
சன் சீ கப்பல் பிரிட்டிஸ் கொலம்பியா கடற்பரப்பை சென்றடைந்துள்ளது
சுமார் 490 இலங்கை அகதிகளை ஏற்றிய எம் வி சண் சீ கப்பல் தற்போது பிரிட்டிஸ் கொலம்பியா கடற்பரப்பை அடைந்துள்ளதாக கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.கனேடிய பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் விக் ரோவிஸ் இதனை உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த கப்பல் நேற்று காலை அந்த நாட்டில் கடற்படையினர் மற்றும் கரையோர பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் கனேடிய அரசாங்க அதிகாரிகளின் தகவல்படி கப்பல் நேற்று மாலையளவிலேயே கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் பெண்களும் குழந்தைகளும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், கப்பலில் உள்ள ஒருவர் மாத்திரம் சுகவீனமுற்றுள்ளதாகவும் முன்னர் வெளியான தகவலை போன்று எவரும் மரணமாகவில்லை என்றும் கனேடிய எல்லைப்பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சன் சீ கப்பல் அகதிகளுக்கு சட்ட மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக கனேடிய தமிழர் பேரவை ஒழுங்குகளை செய்துள்ளது.
இதற்காக தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் வன்கூவருக்கு சென்றுள்ளனர்.
இந்தநிலையில் ஆர்வமுள்ள உறவுகள் கனடியத் தமிழர் பேரவையுடன்
416 240 0078
416 240 0078
உடன் தொடர்பு கொண்டு மனித நேயப் பணிகளில் ஈடுபடலாம் என தமிழர் பேரவை அறிவித்துள்ளது
Friday, August 13, 2010
லண்டனில் நாளை (14-8-2010) செஞ்சோலை படுகொலையின் நான்காம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு.
at
10:22 AM
Posted by
எல்லாளன்
செஞ்சோலை படுகொலையின் நான்காம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும், மலர் வணக்கமும் லண்டனில் நாளை 14-08-2010 அன்று நடைபெறவுள்ளது.2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வன்னிப்பெரு நிலப்பரப்பில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தினுள் சிங்கள இனவெறி அரசின் போர் விமானங்கள் கண்மூடித்தனமாக நடாத்திய விமானக் குண்டுவீச்சில் கொடூரமாக கொல்லப்பட்ட 61 சிறுவர்களின் நினைவுநாளான அதே நாளான நாளை சனிக்கிழமை இந்த நினைவு வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.
லண்டன் ரூட்டிங் அம்மன் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவு தூபி, மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவு தூபிக்கு முன்பாக நடைபெற வுள்ள இந்த நினைவு வணக்க நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ள இந்த நினைவுவணக்க நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்களின் உரையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட 61 மாணவச்செல்வங்களுக்கும் உங்கள் உரிமை கலந்த அஞ்சலியை செலுத்தி அந்த நிகழ்வில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு அவர்களின் தியாகங்களை பெருமைப்படுத்துவதோடு, அவர்களின் ஆத்மசாந்திக்கும் பிரார்தனை செய்யுமாறும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
நாளை நடைபெறவுள்ள இந்த நினைவு வணக்க நிகழ்வின் போது இதுவரை போரினால் கொல்லப்பட்ட மாவீரர்களுக்கும், பொதுமக்களுக்குமாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியை உள்ளடக்கிய நினைவு ஆலயமும் திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வு இடம்பெறும் இடம்: 180-186 UPPER TOOTING ROAD, TOOTING, LONDON, SW17 7EJ
காலம்: 14-08-2010 சனிக்கிழமை
நேரம்: மதியம் 12 மணிக்கு ஆரம்பம் (மதியம் 12 மணிமுதல் மாலை 9 மணி வரை மக்கள் இந்த மலர்வணக்கத்தில் ஈடுபடலாம்)
Wednesday, August 11, 2010
நெல்லையில் ஓவியர் புகழேந்தியின் 'போர் முகங்கள்” ஓவியக்காட்சி!
at
10:02 AM
Posted by
எல்லாளன்
சென்னை, தஞ்சையைத் தொடர்ந்து, தற்போது நெல்லையில் இக்கண்காட்சி நடக்கவுள்ளது.
நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள ஓட்டல் சகுந்தலாவில், ரோஜா ஹாலில் 13.08.2010 அன்று தொடங்கி 15.08.2010 வரை இக்கண்காட்சி நடக்கிறது.
இக்கண்காட்சியின் துவக்க விழா 13.08.2010 அன்று காலை 10 மணியளவில் நடக்கிறது.
நிகழ்வுக்கு, ம.தி.மு.க. நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் திரு. கே.எம்.ஏ.நிஜாம் தலைமை தாங்குகிறார். ம.தி.மு.க. நெல்லை மாவட்டச் செயலாளர் திரு. ப.ஆ.சரவணன், இந்தியக் கம்யு+னிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் திரு. எஸ்.சண்முகவேல், நாம் தமிழர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.சிவக்குமார், புதிய தமிழகம் கட்சியின் நெல்லை மாநகரச் செயலாளர் திரு. எம்.எஸ்.செல்லப்பா, ம.தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் மு.சுப்புரத்தினம், தமிழர் தேசிய இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ் ஈழன் ஆகியோர் தொடக்க விழாவிற்கு முன்னிலை வகிக்கின்றனர்.
கண்காட்சியைத் திறந்து வைத்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ சிறப்புரையாற்றுகிறார். எழுத்தாளர் தி.க.சி., பேராசிரியர் தொ.பரமசிவம், மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் எம்.பிரட்டோ, யாதுமாகி திரு. லேனா குமார் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.
ஓவியர் புகழேந்தி ஏற்புரை நிகழ்த்துகிறார்.
தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை ஓவியங்களை பார்வையாளர்கள் பார்த்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இக்கண்காட்சிக்கான ஏற்பாடுகளை, திரு.டி.இரேமேஷ், வழக்கறிஞர் எம்.அரிபாலகிருஷ்ணன், மணப்படை எம்.மணி, ஆட்டோ பாலு, சேந்தி எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
---------
ஈழத்தில் கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் கொடூரமாகக் கொல்லப்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்களின் பேரவல நிகழ்வினை முன்னிறுத்தி, ஓவியர் புகழேந்தியின் ஓவியக் கண்காட்சி சென்னையில் நடைபெற்றது.
ஈழத்தின் போராட்ட வடிவங்களை 200-க்கும் மேற்பட்ட கோட்டோவியங் களால் வெளிப்படுத்திய புகழேந்தியின் கைவண்ணம், ஈழ மண்ணின் சோகங்களை நம் நெஞ்சில் தைக்கும் வண்ணம் கொண்டு வந்து நிறுத்தியது.
தமிழார்வலர்கள் பெருமளவில் கூடிய இந்நிகழ்ச்சியில் பேசிய காசி ஆனந்தன், ""போராட்டக் களத்தில் வாழ விரும்புகிற வர் ஓவியர் புகழேந்தி. போராட்டத்தால் ஓவியம் உருவாகியதா என்றால் ஓவியமே போராட்டத்தை உருவாக்கியது என சொல்லலாம். போராட்டத்தின் வலிமையை- போரின் வீச்சை தெளிவாகச் செறிவூட்டி லட்சியப் போராகச் சித்தரித்துள்ளார். கடந்த 33 ஆண்டுகளில் இரண்டு லட்சம் தமிழர்கள் இலங்கையில் பலியாகியிருக்கிறார்கள். இறுதிக் கட்டப் போரில் கைதான தமிழ் இளைஞர்களை சிங்களச் சிறைக்கைதிகள் சிறுநீர் கழித்து வரவேற்றார் களாம்.
1833-ல் ஒன்றுபட்ட இலங்கை உருவானது. 26,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தமிழர்கள் வாழும் பகுதியாக இருந்தது. கடந்த 27 ஆண்டுகளில் 7,500, 15,000 சதுர கிலோ மீட்டர்கள் என நிலப்பரப்பை இழந்துள்ளனர். கடந்த போர்களில் பத்தாயிரம் தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டுப் படுகொலையும் செய்யப்பட்டுள்ளனர். உலகில் வேறெங்கும் இத்தகைய கொடுமைகள் நிகழ்ந்ததில்லை. இரண்டு லட்சம் வீடுகள் குண்டுகள் துளைத்து சேதமடைந்துள்ளன. இத்தகைய கொடுமை களை நம்முன் கொண்டு நிறுத்தியுள்ள ஓவியர் இவர் ஒருவரே என்றுகூட சொல்லலாம்'' என்றார்.
சி.பி.ஐ. மகேந்திரன் பேசுகையில், ""வாழ்க்கை முழுவதும் அடக்குமுறையால் சிதைக்கப் பட்டவர்களின் துயரத்தை உணர்வுப்பூர்வமாகச் சித்தரிக்கின்றன புகழேந்தியின் ஓவியங்கள்! எந்தக் காலத்திலும் இந்தப் போர் மறைந்து விடாது! போராட்ட வடிவம் மாறும்; வெற்றி பெறும்.
இரண்டாம் உலகப்போர் மாபெரும் கலைஞர்களை- படைப் பாளர்களை உருவாக்கி இருக்கிறது. அழிவு என்பது மனித குலத்தின் விடுதலையைச் சாத்தியப்படுத்தியது. ஈழப்போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் முனை போராட்டம் மிகப் பெரியது. அதன் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. ஐ.நா. சபை முன்னின்று தமிழகத் தின் உதவியோடு அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்துக்கு எத்தகைய முன்கை எடுக்க வேண்டுமோ, அதனைச் செய்வது மத்திய- மாநில அரசுகளின் பொறுப்பாகும்'' என்றார்.
அய்யாநாதன் (பத்திரிகை யாளர்), ""இந்த ஓவியங்கள் முற்றுப் பெறாமல் தொடரும். ஈழத் தமிழர்களின் வாக்குமூலங் கள் இவை. அங்குள்ள மக்களின் உண்மை நிலையை இன்னும் நமது ஊடகங்கள் சரியாக வெளிச்சமிட்டுக் காட்ட வில்லை. அங்கு நடந்த படுகொலைகளை ஓவியமாக மட்டும் அல்லாமல் தன் பயண அனுபவத்தின் மூலம் படைப்பு களாகவும் படைத்திருக்கிறார் புகழேந்தி.
சிங்களப் பேரினவாதத்தின் போக்குகளை எதிர்க்க இந்திய அரசுக்குத் துணிவில்லை. அதற்குத் துணை போகிறது. இந்தியாவின் பொய் முகத்தை- முகங்களை அடையாளம் காட்டி மக்கள்முன் கொண்டு நிறுத்த வேண்டும். ஈழத்தின் வரலாற்றை, ஈழ மக்களின் சொல்லொணா துயரங்களைப் பதிவு செய்திருக் கிறார் புகழேந்தி. ஓர் இனத்தின் வரலாற்று ஆவணம் இது'' என்றார்.
இயக்குநர் பாலுமகேந்திரா, ""என்னால் இப்போதெல்லாம் பேச முடியவில்லை. ஈழத்தின் துயரம் என்னை அழச்செய்து விடுகிறது. ஈழ மக்களுக்கு எதிரான அராஜக மும் அட்டூழியமும் ஞாபகத்து வந்து பேச முடியாமல் திணற வேண்டியிருக்கிறது.
நவீன வண்ணமயமான உலகில், கருப்பு- வெள்ளைக் கோடுகள் யதார்த்தமாக நம்முன் நின்று பேசுகின்றன. மனிதத்தின் அழுத்தம் வண்ணங்களில் வெளிப் படுவதில்லை. உலக உருண்டை யில் தமிழ்நாடு என்று ஒன்று குறிக்கப்படுமானால், அது ஈழமாகத்தான் இருக்கும். இத்தகைய ஈழ மண்ணின் துயரங்களை என் வாழ் நாளுக்குள் திரைப்படங் களாகக் கொண்டு வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது'' என்றார்.
இயக்குநர்- நடிகர் மணிவண்ணன், ""மூன்று திட்டங்களின் மூலம் செயல்பட்டாலே அம்மக் களுக்கு நாம் உதவி செய்தவர் களாவோம். நீண்ட கால வளர்ச் சிக் கண்ணோட்டத்தில் தமிழ் அரசு உருவாக முன்கை எடுக்க வேண்டும். இரண்டாவதாக புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் தம் சொந்த இடங்களில் வாழ உத்தரவாதமளித்து, அவர்களின் வாழ்க்கைக்கான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். சிறையில் அடைக் கப்பட்டுள்ள அனைத்து தமிழ் இளைஞர்களையும் விடுதலை செய்து, அவர்கள் வாழ்வுரிமைக் கான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். இதனை மேற்கொண்டாலே ஈழ மக்கள் பலன் பெறுவர்.
தமிழர்கள் எங்கே வாழ்ந் தோம், எங்கே வீழ்ந்தோம் என்பதை அறியாதவர்கள். தமிழர் களுக்கு எதிரான அரசு ஒன்று உண்டு என்றால், அது தமிழக அரசுதான்'' என்றார்.
சீமான், ""இந்த ஓவியங்கள் கற்பனை அல்ல. களத்தில் நின்று போராடி வீர மரண மடைந்த மாவீரர்களின் படங்கள்! காலம்கால மாக பல புரட்சிகளைப் பேச வைத்தவை ஓவியங்களே.
ஈழத்தமிழ்ப் போராளி களுடன் பகிர்ந்து கொள் ளும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த அனுபவங்கள் தமிழ் மக்களின் விடுத லைக்கான உணர்வை ஏற்படுத்தின. தமிழ் தேசத்துக்கான விடுதலை என்ற பதாகையை ஏந்தி விட்டோம். அதற்கான போராட்டத்தைத் தொடர்ந்து மேற் கொள்ள வேண்டும்'' என்றார்.
மணியரசன் (தமிழ் தேசிய பொது வுடைமைக் கட்சி), ""ஓவிய உலகில் இது புதிய பாய்ச்சல். ஓராண்டாக முயன்று தமிழ் மக்களை எழுதியுள்ளார். பார்த்தவர்கள் மனத்தில் துன்பம் பற்றிக் கொள்ளும் வகையில் தீட்டி இருக்கிறார். முள்ளி வாய்க்கால் முகங்கள் தமிழரின் பிரதிபிம்பம். ஆற்றாது அழுத கண்ணீர் புலப்படுகிறது. உண்மையான சமாதானப் புறாக்களை நேரு குடும்பம் குத்திக் கிழித்துள்ளது.
இவர்தம் படைப்புகளில் தமிழகத்துப் போராட்டங்களையும் காட்சிப்படுத்த வேண்டும். அப்போது தமிழகத்தின் உண்மை முகங்கள் நம்முன் தெரியும்'' என்றார்.
ஏழு நாட்கள் நடைபெற்ற இந்த ஓவியக் கண்காட்சியில் ஈழத் தமிழர்களின் சோக முகங்களை- அவர்களுக்கெதிரான அடக்கு முறைகளைப் பலர் கண்டு மனம் வெதும்பினர்.
-கோ. எழில்முத்து
Saturday, August 07, 2010
தமிழ் அகதிகளை வரவேற்பதற்கான கனடியத் தமிழ் மக்கள் கலந்துரையாடல்
at
9:47 PM
Posted by
எல்லாளன்

DATE: Monday, August 9th, 2010
TIME: 6 pm to 9 pm
LOCATION: Hart House - Music Room, University of Toronto,
7 Hart House Circle, Toronto, ON
For media inquiries, please contact:
David Poopalapillai, david@canadiantamilcongress.ca or
Manjula Selvarajah, manjulas@canadiantamilcongress.ca.
For general inquiries, please reach the Canadian Tamil Congress at
416.240.0078.
--------------------
200க்கும் அதிகமான தமிழ் அகதிகள் சிறிலங்கா அரசாங்கத்தின் பழிவாங்கல் நடவடிக்கையில் இருந்து தப்பி ஓடுகின்றனர்.
ஜனநாயக முறைப்படி கனடாவாழ் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட கனடியத் தமிழ் தேசிய அவை உறுப்பினர்களும் பல கனடியத் தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து கப்பலில் கனடாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் தமிழ் அகதிகளுக்கு உதவி செய்வது தொடர்பாக 2010ம் ஆண்டு ஓகஸ்ட் 4ம் திகதி ஒரு கலந்துரையாடலை நடத்தினர்.
அந்த நிகழ்ச்சியின் போது சட்டத்தரணியும், குடிவரவு மற்றும் அகதிகள் தொடர்பான விடயங்களில் நிபுணருமான லோர் வோல்மன் சில மாதங்களுக்கு முன்னர் கடல்மார்க்கமாக வன்கூவரில் வந்து இறங்கிய 76 தமிழ் அகதிகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விபரங்களை எடுத்து விளக்கினார்.
அத்துடன் கனடாவை நோக்கி வந்து கொண்டிருக்கும், பெண்கள் குழந்தைகள் உட்பட, 200 அகதிகள் தொடர்பான நடவடிக்கைகளை தாமதிக்காமல் ஆர்ம்பிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் விளக்கிக் கூறினார்.
“கனடாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் தமிழ் அகதிகளுக்கு வழங்க வேண்டிய உடனடி உதவிகள் தொடர்பாக வன்கூவரில் வசிக்கும் தமிழ் மக்களுடன் இணைந்து செயற்படுகின்றோம். இந்த அகதிகளின் நிலைமையை வளக்கும் ஆவணங்களையும் நாம் தயாரித்துக் கொண்டிருக்கின்றோம்,” என கனடியத் தமிழ் தேசிய அவையின் பேச்சாளரான கிருஷ்ணா சரவணமுத்து கூறினார்.
இந்த அகதிகளுக்கு உடனடியான உதவிகளை வழங்குவதற்கு கனடியத் தமிழர் தேசிய அவை வேறு பல தமிழ் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுகின்றார்கள். நடைபெற்ற கலந்துரையாடலின் போது சட்ட ஒழுங்குகளைச் செய்வதற்கும், ஊடகத் தொடர்புகளை மேற்கொள்வதற்கும், குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சமூகத் தொடர்புகளை மேற்கொள்வதற்குமாக பல உபகுழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.
“கனடிய தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் எடுக்கும் சகல சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கும் நாம் மதிப்பளிக்கும் அதே வேளை வந்துகொண்டிருக்கும் தமிழ் அகதிகளின் பிரச்சினையை மனிதநேயத்துடன் நோக்குமாறு கனடிய அரசாங்கத்தைப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்,” என தேசிய அவையின் தலைவர் மோகன் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
--------------------------
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
எம்.வி சன் சீ எனப்படும் கப்பல் முன்னர் எம் வி ஹரின் பனிச்-19 என்ற பெயரை கொண்டிருந்தது (படத்தில் உள்ளது). அது தற்போது 200 தமிழ் மக்களை ஏற்றிக்கொண்டு கனடாவை நோக்கி செல்கின்றது என வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
இந்த கப்பல் தொடர்பில் எமக்கு அதிக தகவல்கள் தெரியாது, ஆனால் அது கனடாவின் வன்கூவர் பகுதியை நோக்கி செல்லலாம் என அமெரிக்கா வெளிவிவகார திணைக்களத்தின் பேச்சாளர் பிலிப் ஜே குறொலி தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து நாட்டு கொடியுடன் செல்லும் இந்த கப்பலை அமெரிக்காவின் கரையோர காவல்படையினர் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில மாதங்களாக கடலில் பயணம் செய்யும் இந்த கப்பல் எதிர்வரும் வாரத்தின் முற்பகுதியில் பிரிட்டிஸ் கொலம்பியாவை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
AUGUST 9TH FORUM ON TAMIL ASYLUM SEEKERS OF CARGO SHIP MV SUN SEA
Toronto, August 6, 2010 - As reports of another boat containing Tamil refugees spread, so does the hysteria around their admissibility, and the means by which they arrive in Canada. Sparked by Sri Lankan government sources, and its intelligence apparatus, these innuendos effectively seek to discredit the would be refugees of their rights to a fair hearing, before they arrive ashore. This time around, there is increasing pressure from Sri Lankan sources to intercept the ship.
As an example, such sources have suggested that our government send it’s military to “thwart threats to Canada”, with the implication that the boatload of refugees are a threat to Canada with little regard for the validity of individual cases. Similar statements made by the same sources with regards to the 76 Tamil asylum seekers who arrived on the Ocean Lady in October 2009 were investigated by Canadian authorities, and no evidence found to that effect.
The Canadian government response to the arrival of the Ocean Lady in October 2009 offers some insight as to how it may respond to this migrant ship: following due process, assessing each case individually, accepting valid cases and rejecting anyone who is seen as a threat to Canadian security.
The Canadian Tamil Congress is organizing an urgent forum to directly address this issue and discuss Canada’s role in protecting refugees. In particular, we will hear from Canadian organizations, and politicians on the Canadian response to these refugees. We will also have on hand asylum seekers from the Ocean Lady who arrived in October 2009 and members of the community who themselves were refugees.
DATE: Monday, August 9th, 2010
TIME: 6 pm to 9 pm
LOCATION: Hart House - Music Room, University of Toronto,
7 Hart House Circle, Toronto, ON
For media inquiries, please contact:
David Poopalapillai, david@canadiantamilcongress.ca or
Manjula Selvarajah, manjulas@canadiantamilcongress.ca.
For general inquiries, please reach the Canadian Tamil Congress at
416.240.0078.
Wednesday, July 28, 2010
பிரான்ஸ் தமிழ் மக்களே! சிவந்தனது மனிதநேய நடை பயணத்தில் இணையுங்கள்
at
9:47 AM
Posted by
எல்லாளன்
பிரான்சின் கடற்கரையான கலையை நேற்றிரவு 8:00 மணியளவில் சென்றடைந்திருந்த சிவந்தன் சிறிய தூரம் தனது நடை பயணத்தை மேற்கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஓய்வெடுத்த அவர் இன்று காலை முதல் அதே உற்சாகத்துடன் நடந்த செல்லுகின்றார்.
காலை 8:30 மணியவில் புறப்பட்ட அவர், ஐரோப்பிய நேரம் பிற்பகல் ஒரு மணிவரை 22 கிலோமீற்றர் நடந்து சென்றுள்ளார். இதுவரை Calais, Guines, Landerethun,-le-nord, Elinghen, Le wast போன்ற இடங்களைக் கடந்து சென்றுள்ள சிவந்தன் Desvres என்ற இடத்தை அடைவதற்கு இன்னும் 21 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது.
அத்துடன், பிரான்ஸ் தலைநகர் பரிஸை அடைவதற்கு இன்னும் பல நூற்றுக்கணக்கான கிலோமீற்றர்கள் இருப்பதுடன், அங்கிருந்து சுவிற்சர்லாந்து ஜெனீவா நோக்கி நடக்க வேண்டியுள்ளது.
நேற்றிரவு முதல் பிரான்ஸ் தமிழ் மக்கள் சிலர் இணைந்து நடந்து வருகின்ற போதிலும், ஏனைய மக்களும் இணைந்துகொண்டு சிவந்தனின் கோரிக்கைக்கான தமது ஆதரவை வழங்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கீழுள்ள தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொண்டு அவர் எந்த இடத்தில் நடந்து செல்லுகின்றார் என்ற விபரத்தைப் பெற முடியும்.
பிரான்ஸ் – 0033 66 49 79 490
* சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,
* தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,
* மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
சுவிற்சர்லாந்து ஜெனீவா ஈகப்பேரொளி முருகதாசன் திடலை (ஐ.நா மனித உரிமைகள் சபை முன்றலை) எதிர்வரும் 6ஆம் நாள் சிவந்தன் சென்றடைவார் என கணிக்கப்பட்டுள்ளதால், அன்று பிற்பகல் 2:00 மணிக்கு மாபெரும் எழுச்சிக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் மனுக் கையளிப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சிவந்தனுடன் மக்கள் இணைய தொடர்பு இல : பிரான்ஸ் - 0033 66 49 79 490
Friday, July 23, 2010
கனடா, ஒன்ராரியோ பாராளுமன்றம் முன்றலில் ஜீலை 25, கறுப்பு யூலை ஒன்றுகூடல்
at
8:42 AM
Posted by
எல்லாளன்

உலகலாவிய ரீதியில் மீண்டும் நீதிவேண்டி, உரிமைவேண்டி தமிழர் நடாத்தும் கறுப்பு யூலை நிகழ்வுகளின் வரிசையில், வரும் ஞாயிற்றுக்கிழமை, யூலை 25ஆம் நாள் மாலை 5 மணிக்கு ஒன்ராரியோ பாராளுமன்றம் Queen's Park முன்றலில் பாரிய ஒன்றுகூடல் ஒன்றிற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் - கனடா பிரதிநிதிகள், கனடியத் தமிழர் தேசிய அவை ஆகியன அழைப்புவிடுத்துள்ளன.
27 ஆண்டுகளுக்கு முன்னர் யூலையில் ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்றும் 27 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. ஈழத்தமிழினம் தொடர்ந்தும் இனப்படுகொலைக்குள்ளாகி வருகின்றது.
தனது பொறுப்பில் இருந்து தவறி நிற்கும் சர்வதேசத்தை அதன் மனிதநேய கடமைகளை ஆற்ற வைக்க நாம் தொடர்ந்தும் கடுமையாக உழைக்க வேண்டும். இது நாம் துவண்டு கிடக்கும் நேரமல்ல விவேகத்துடன் விரைந்து செயற்படும் காலம் என அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
எம் மக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி இனப்படுகொலை செய்துவரும் சிங்கள ஆட்சியாளர்கள் தற்போது உயிரைக் காக்க தப்பிவரும் தமிழர்களையும் பயங்கரவாதிகள் என முத்திரைகுத்தி சர்வதேச ரீதியாக தமிழர்களை தனிமைப்படுத்த முயன்று நிற்கின்றது.
இந்நிலையில் எமது ஒன்றுபட்ட எழுச்சியும், காலத்தின் தேவைகருதிய விரைந்த செயற்பாடுகளும் எம் மக்களின் நிலையை வெளிகொணருவதும் அவசியம் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வகையில் போர்குற்றங்கள் குறித்து சிறீலங்கா மீது சுயாதீனமான சர்வதேச விசாரணை மேலும் தாமதமின்றி உடன் நடாத்தப்பட வேண்டும்.
போர்க்கைதிகள் அனைவரும் உடனடியாக சர்வதேச கண்காணிப்பில் கொண்டுவரப்பட வேண்டும், நிபந்தனையின்றி விடுவிக்கப்படவேண்டும். மனித உரிமைகளை சிறீலங்கா மதிக்கும் வரை, ராஐதந்திர, பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஓன்றுகூடலின் முக்கிய கருப்பொருள்களாக முன்வைக்கப்பட்டுள்ன.
இலட்சியத்தில் ஓர்மம் கொண்டு ஒன்றுபட்டு உறுதிகொண்ட மக்களே வரலாறு படைப்பார்கள். வாருங்கள், வரலாறாக வாருங்கள், எங்களுக்காக, எங்கள் சொந்தங்களுக்காக வாருங்கள் என மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Wednesday, July 21, 2010
பிரான்சில் கறுப்பு யூலை நினைவு நாள் பேரணி 2010
at
9:54 PM
Posted by
எல்லாளன்
மானிடநேயம் சிறதும் கூட இல்லாமல் பிஞ்சுக்குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இரக்கமின்றி வெறிபிடித்த விலங்குகளாய் சிங்கள மக்களும் அரசும் இணைந்து தமிழினப்படுகொலையை செய்து முடித்தார்கள்.
தமிழ் மக்களின் இரத்தக்கறை படிந்த பக்கங்களாக இன்னும் வலியைத்தந்துகொண்டிருக்கும் கறுப்பு யூலை கனத்த நாட்கள் என்றும் மறக்கப்பட முடியாதவை.
பிரான்சு வாழ் உறவுகளே நடைபெறவிருக்கும் கறுப்பு யூலை நினைவு நாளில் அனைவரும் பெருந்திரளாய் கலந்து கொள்ளுவோம் வாருங்கள்.
காலம் 27.07.2010 ஞாயிற்றுக்கிழமை.
நேரம் 14.00மணி
இடம்: REPUBLIQUE இருந்து BASTILLE வரை
Tuesday, July 20, 2010
ஐ.நாவை நோக்கி பிரித்தானியாவில் இருந்து நடை பயணம்
at
9:03 AM
Posted by
எல்லாளன்
போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தியும், தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும், பிரித்தானியாவில் இருந்து ஜி.சிவந்தன் என்பவர் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நடை பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்.
கறுப்பு ஜூலையை முன்னிட்டு எதிர்வரும் 23ஆம் நாள் இரவு 9:00 மணி முதல் 11:30 மணிவரை பிரித்தானியப் பிரதமர் இல்லத்தை மையப்படுத்தி நடைபெறவுள்ள இரவுநேரப் போராட்டத்தைத் தொடர்ந்து இவரது நடை பயணம் ஆரம்பமாகவுள்ளது.
மத்திய லண்டனில் இருந்து நடை பயணத்தை ஆரம்பிக்கும் சிவந்தன், ஏ-3 நெடுஞ்சாலையூடாக நடந்து போட்ஸ்மவுத் கடற்கரையைச் சென்றடைந்து, அங்கிருந்து பிரான்சின் கடற்கரையான கலையை அடைந்த பின்னர், ஜெனீவா நோக்கி நடந்துசெல்ல இருக்கின்றார்.
இவரது நடை பயணத்திற்கு சுமார் இரண்டு வாரங்கள் எடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் நாள் ஜெனீவாவை சென்றடைந்து, ஐ.நா மனித உரிமைகள் சபையில் மனுக் கையளிக்கப்பட இருக்கின்றது.
சிவந்தனின் நடை பயணத்தின்போது அந்தந்த நாட்டு மக்களிற்கு அவர்களின் மொழியில் அச்சிடப்பட்ட அவரது கோரிக்கைகள், மற்றும் ஈழத்தமிழ் மக்களின் நிலை பற்றிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படவுள்ளன.
அந்தப் பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகரசபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் போன்ற சமூகத் தலைவர்களுனான சந்திப்புக்களும் இடம்பெறவுள்ளன. அத்துடன், சிவந்தன் மேற்கொள்ளும் இந்த நடை பயணத்தில் தத்தமது பிரதேசங்களில் தமிழ் மக்களும் இணைந்து நடக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
மாற்றுமொழி ஊடகங்களுக்கும் இது பற்றி அறிவிப்பதுடன், தமிழ் ஊடகங்களும் இந்த நடை பயணத்திற்கும், ஆங்காங்கே தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் பணியிலும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் பிரித்தானிய தமிழர் பேரவை, மற்றும் தமிழ் இளையோம் அமைப்பு போன்றன கேட்டுள்ளன.
இதேபோன்று பிரான்ஸ், சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் மக்களும் இந்த நடை பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், சிவந்தனுடன் இணைந்து நடப்பதன் ஊடாக தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஐரோப்பிய மக்கள் முன்னலையில் வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் எனவும் இந்த நடை பயணத்தை ஏனைய நாடுகளில் ஒழுங்கு செய்துள்ள ஐரோப்பிய தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கறுப்பு ஜூலை - "நியாயத்துக்காக நடைபயணம்" நடுநிசி விழிப்புநிலைப் போராட்டம்
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் நடந்த கலவரத்தில் தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை நாளான கறுப்பு ஜூலையின் 27 ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு லண்டனில் நடைபெறவுள்ளது.
இந்த கறுப்பு ஜூலை ஊர்வலமானது 2010 ஜூலை 23ம் திகதி, வெள்ளிக்கிழமை வெஸ்மினிஸ்டர் மெதடிஸ்ட் தேவாலயத்தின் பின்புறமாக உள்ள டோதில் வீதியில் (Tothill Street) இரவு 9 மணிக்கு ஆரம்பமாகி டவுனிங் வீதியில் (Downing Street) 11.30 மணிக்கு நிறைவடையவுள்ளது.
இந்த பேரணியில் கலந்துகொள்ளுமாறு லண்டன் வாழ் தமிழர்கள் அனைவரும் வேண்டப்படுகிறார்கள். பேரணி நடக்கவுள்ள இடத்துக்கு அண்மையாக செண்ட் ஜேம்ஸ் பார்க் அல்லது வெஸ்மினிஸ்டர், தொடரூந்து நிலையங்கள்(Under Ground) உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பேரணியானது, இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்த விசாரணையை ஆரம்பிக்க வேண்டும், போர்க் கைதிகளைச் சந்திக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் அனுமதிக்கப்பட வேண்டும், மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்காக இலங்கையைப் பகிஸ்கரிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளைச் சர்வதேசத்திடம் விடும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பேரணியில் கலந்து கொள்பவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படும். தேவைப்படுவோர் பிரித்தானிய தமிழர் பேரவையை +44(0)20 8808 0465 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.
கறுப்பு ஜூலை நடைபெற்று 27 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், கடந்த காலத்தில் தமிழர்கள் மீது சிங்கள அரசு கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகளை உணர்ந்து கொள்வதும் இங்கு அவசியமாகும்.
1948 இல் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்து சில மாதங்களின் பின்னர், இலங்கை அரசாங்கமானது 33% வீதமான தமிழர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறித்தது. தற்போது 62 ஆண்டு காலமாகியும் இந்த பாகுபாடு தொடர்கிறது.
1958 ஆம் ஆண்டில் இனப்படுகொலையின் முதலாவது கட்டமாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். தற்போது 52 ஆண்டுகள் ஆகியும் இந்த வன்முறை தொடர்ந்த வண்ணம் உள்ளது. 1983 ஆம் ஆண்டில் 3000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். 150,000 தமிழர்கள் தமது வீடு, வாசல்களை இழந்தனர்.
தற்போது 27 ஆண்டு காலம் ஆகிவிட்டது. ஆனால் தமிழ் இன அழிப்பு நடந்து கொண்டே உள்ளது. 2009 ஆம் ஆண்டில் 40,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு, 3 லட்சம் தமிழர்கள் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். இவற்றையெல்லாம் உலகம் கவனித்துக்கொண்டு இருக்கும் நிலையிலும், தமிழர் அழிப்புத் தொடர்கிறது...
இன்று, இடம்பெயர்ந்த மக்கள் தமக்கான தேவைகளை ஏற்பாடு செய்யும்படி கைவிடப்பட்டுள்ளனர், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் தலைவிரித்தாடுகின்றன, தமிழ் பகுதிகளை அரசு சிங்களக் குடியேற்றமாக்குகிறது, ஊடகத் தடை விதிக்கப்பட்டுள்ளது, சர்வதேச கண்காணிபாளர்கள் அப்பகுதிகளை அணுக முடியாதுள்ளது, கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை, உயிருடன் வாழ்ந்துள்ளவர்களுக்காகவும் ஆதரவுக் குரல் எதுவும் இல்லை...
அநியாயம் தொடர்கிறது...
ஒரு புறம் இன அழிப்பு, மறுபுறம் திட்டமிட்ட கலாச்சார சீரழிவு என இலங்கை அரசு எம் இனத்தை அழித்து வேரோடு சாய்க்க நினைக்கிறது. பிரித்தானியாவில் இரவு 9.00 மணிக்கு இந்த விழிப்புணர்வுப் போராட்டம் நடைபெறவுள்ளது. அனைத்துத் தமிழ் மக்களும் இதில் கலந்துகொண்டு எமது ஒற்றுமையை வெளிப்படுத்தி இலங்கை அரசின் இன அழிப்பை உலகிற்கு பறைசாற்றவேண்டும் !















![[TE_Oath_front+small.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiItRXLQdcFSxlawrbJ1CkeryycsyDc_ogC2tdpKZE5xWPqYWCX4k9fmXWvTjCgYrfJiOVpYF1-VYEcU9kVI7xXg27DmNkWRpROs47b3bTVeCOPJWPQAESKgd9jJ0EF_vuiSJJWC9OOgOZw/s1600/TE_Oath_front+small.jpg)









